என் மலர்
சினிமா செய்திகள்

தெலுங்கு சினிமா தயாரிப்பாளர் தற்கொலை - பாகுபலி இயக்குனர் சித்ரவதை செய்ததாக பரபரப்பு வீடியோ

- பாகுபலி இயக்குனர் எஸ்.எஸ். ராஜ மவுலியின் நண்பர் சீனிவாசராவ்
- தற்கொலைக்கு முன்பாக அவர் செல்பி வீடியோ எடுத்துள்ளார்.
பாகுபலி இயக்குனர் எஸ்.எஸ். ராஜ மவுலியின் நண்பர் சீனிவாசராவ் (வயது 34). இவர் சினிமா நிர்வாக தயாரிப்பாளராகவும் இருந்தார்.
இந்த நிலையில் சீனிவாச ராவ் ஐதராபாத்தில் தற்கொலை செய்து கொண்டார்.
தற்கொலைக்கு முன்பாக அவர் செல்பி வீடியோ எடுத்துள்ளார். அதில் இயக்குனர் ராஜமவுலி தன்னை மிகப்பெரிய சித்ரவதைக்கு உட்படுத்தினார். அவருடைய நடவடிக்கை என்னை தற்கொலைக்கு தூண்டியது என தெரிந்திருந்தார்.
இந்த வீடியோவை அவருடைய நெருங்கிய நண்பர்களுக்கு அனுப்பி வைத்தார்.
இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. பாகுபலி இயக்குனர் மீது தானாக முன்வந்து வழக்கு பதிவு செய்ய வேண்டும். எஸ். எஸ். ராஜமவுலியை பொய் கண்டுபிடிப்பு சோதனைக்கு உட்படுத்த வேண்டும் என வலியுறுத்தி உள்ளனர். இது குறித்து போலீசார் இதுவரை எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை. ராஜமவுலி மற்றும் அவரது குழுவினர் இது தொடர்பாக எந்த அறிக்கையும் வெளியிட வில்லை.
இந்த சம்பவம் தெலுங்கு திரையுலகினர் இடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்