search icon
என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    பரத் நடிக்கும் காளிதாஸ் 2 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது
    X

    பரத் நடிக்கும் காளிதாஸ் 2 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது

    • 2019-ம் ஆண்டில் பரத் நடிப்பில் வெளியாகி வெற்றியைப் பெற்றது 'காளிதாஸ்' திரைப்படம்
    • தயாரிப்பு நிறுவனமான ஸ்கை பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் தயாரித்திருக்கிறார்.

    2019-ம் ஆண்டில் பரத் நடிப்பில் வெளியாகி விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் வெற்றியைப் பெற்ற 'காளிதாஸ்' படத்தை தொடர்ந்து அதன் இயக்குனரான ஸ்ரீ செந்தில் இயக்கத்தில் உருவாகி வருகிறது 'காளிதாஸ் 2' திரைப்படம்.

    இப்படத்தில் பரத், அஜய் கார்த்திக், பிரகாஷ் ராஜ், 'ஆடுகளம்' கிஷோர், சுரேஷ் மேனன், ஆனந்த் நாக், பவானி ஸ்ரீ , அபர்னதி, ராஜா ரவீந்தர், டி.எம். கார்த்திக் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.

    இவர்களுடன் 'பூவே உனக்காக' படத்தின் மூலம் ரசிகர்களிடம் பிரபலமான நடிகை சங்கீதா- இப்படத்தில் அழுத்தமான வேடத்தில் நடித்திருப்பதன் மூலம் தமிழ் சினிமாவிற்கு ரீ என்ட்ரி ஆகியிருக்கிறார்.

    படத்திற்கு சாம் சி. எஸ். இசை அமைத்திருக்கிறார். கிரைம் திரில்லராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை பிரபல விநியோகஸ்தரும், தயாரிப்பாளருமான பைவ் ஸ்டார் செந்தில், அவரின் சொந்த பட தயாரிப்பு நிறுவனமான ஸ்கை பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் தயாரித்திருக்கிறார்.

    படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து தற்போது படப்பிடிப்புக்கு பிந்தைய தொழில்நுட்ப பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இப்படத்தின் முதல் தோற்றத்தை நடிகர் விஜய் சேதுபதி தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

    படத்தைப் பற்றி இயக்குநர் பேசுகையில், '' ரசிகர்களிடம் வரவேற்பை பெற்ற காளிதாஸ் படத்தின் முதல் பாகத்தை தொடர்ந்து அதன் இரண்டாம் பாகம் தற்போது கிரைம் திரில்லராக உருவாகி இருக்கிறது. சென்னை மற்றும் கேரளாவில் படப்பிடிப்பு நடைபெற்றது.

    கோடை விடுமுறையில் படத்தை திரையரங்குகளில் வெளியிட திட்டமிடப்பட்டு உள்ளது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    Next Story
    ×