என் மலர்
சினிமா செய்திகள்
தனுஷின் இட்லி கடை படத்தின் ஃபர்ஸ்ட்லுக் நாளை வெளியீடு
- தனுஷ் இயக்கத்தில் 4 வது படமாக 'இட்லி கடை' என்கிற திரைப்படம் உருவாகியுள்ளது
- திரைப்படம் வரும் ஏப்ரல் 10 ஆம் தேதி வெளியாகவுள்ளது.
நடிகர் தனுஷ் இயக்கத்தில் வெளியான பவர் பாண்டி, ராயன் போன்ற படங்கள் ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்தது. அடுத்தது இவரது இயக்கத்தில் உருவாகி இருக்கும் நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் படத்தின் பாடல்கள் வெளியாகி மாபெரும் வெற்றி அடைந்தது.
தனுஷ் இயக்கத்தில் 4 வது படமாக 'இட்லி கடை' என்கிற திரைப்படம் உருவாகி வருவதாக அறிவிப்பு வெளியானது. இது தனுஷின் 52-வது திரைப்படமாகும். தனுஷே இயக்கி நடிக்கும் இத்திரைப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார். இந்த படத்தினை டான் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. திரைப்படம் வரும் ஏப்ரல் 10 ஆம் தேதி வெளியாகவுள்ளது.
'திருச்சிற்றம்பலம்' படத்தின் நாயகியான நித்யாமேனனுடன் தனுஷ் மீண்டும் இணைகிறார் என்கிற தகவல்கள் ஏற்கனவே வெளியாகின. இந்நிலையில் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் புத்தாண்டை முன்னிட்டு நாளை வெளியாகவுள்ளதாக படக்குழு புது போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளனர்.
Idly kadai First look Tom 5pm pic.twitter.com/iWgUiFMnrq
— Dhanush (@dhanushkraja) December 31, 2024
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.