என் மலர்
சினிமா செய்திகள்
மிஸ்டர் பாரத் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது
- லோகேஷ் கனகராஜ் தயாரிப்பில் உருவாகி வரும் மற்றொரு திரைப்படம் 'மிஸ்டர் பாரத்'
- நிரஞ்சன் இயக்கும் இப்படத்தில் யூட்யூப் வீடியோ மூலமாக புகழ்பெற்ற பாரத் கதாநாயகனாக நடிக்கிறார்.
லியோ படத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் கூலி திரைப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கி வருகிறார்.
லோகேஷ் கனகராஜின் ஜி ஸ்குவாட் தயாரிப்பு நிறுவனத்தின் அடுத்த தயாரிப்பாக பென்ஸ் என்கிற திரைப்படம் உருவாகி வருகிறது. ராகவா லாரன்ஸ் நடிப்பில் பாக்கியராஜ் கண்ணன் இத்திரைப்படத்தை இயக்குகிறார். இப்படத்திற்கு லோகேஷ் கனகராஜ் கதை எழுதியுள்ளார்.
இந்நிலையில், லோகேஷ் கனகராஜ் தயாரிப்பில் உருவாகியுள்ள மற்றொரு திரைப்படமான 'மிஸ்டர் பாரத்' படத்தின் ப்ரோமோ வீடியோ சில நாட்களுக்கு முன் வெளியானது.
நிரஞ்சன் இயக்கும் இப்படத்தில் யூட்யூப் வீடியோ மூலமாக புகழ்பெற்ற பாரத் கதாநாயகனாக நடிக்கிறார். கட்சி சேர பாடல் மூலம் புகழ்பெற்ற சம்யுக்தா விஸ்வநாதன் அவருக்கு ஜோடியாக இப்படத்தில் நடித்துள்ளார். மேலும் பால சரவணன் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
இந்நிலையில் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. அதில் பாரத்தின் மீது சம்யுக்தா படுத்துள்ளார். பாரத் கையில் குழந்தைகள் விளையாடும் துப்பாக்கி. அவரை சுற்றி குழந்தைகள் விளையாடும் பொருட்கள் என நிறைந்துள்ளது. இதனால் இப்படம் முழுக்க முழுக்க ஒரு காமெடி திரைப்படமாக இருக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
Here is the first look of my debut film #MrBhaarath ? @Dir_lokesh @Sudhans2017 @Jagadishbliss @gsquadoffl @passionstudios_ @TheRoute @Niranjan_Dir @samyukthavv @Bala_actor @Dir_Chandhru @linga_offcl @adithya_kathir@om20narayan @Dhivakeryahooi1 @PranavMuniraj pic.twitter.com/tYSg8VUjwc
— Bhaarath (@Bhaarath_Offl) December 20, 2024
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.