என் மலர்
சினிமா செய்திகள்
காளியோட சம்பவம் ஆரம்பம் - சீயான் விக்ரமின் வீர தீர சூரன் டீசர் வெளியீடு
- விக்ரம் அவரது 62-வது படமாக 'வீர தீர சூரன்' படத்தில் நடித்துள்ளார்.
- படத்தின் டீசரை படக்குழு தற்பொழுது வெளியிட்டுள்ளது.
சித்தா' பட இயக்குனர் அருண் குமார் இயக்கத்தில் விக்ரம் அவரது 62-வது படமாக 'வீர தீர சூரன்' படத்தில் நடித்துள்ளார். இரு பாகங்களாக உருவாகும் இப்படத்தின் 2-ம் பாகத்தை முதலில் வெளியிட உள்ளனர்.
இப்படத்தில் எஸ்.ஜே.சூர்யா, சுராஜ் வெஞ்சராமுடு, சித்திக், துஷரா விஜயன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ரியா ஷிபு தயாரித்துள்ள இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார்.
மதுரையை கதைக்களமாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ள இப்படத்தின் ஃபர்ஸ்ட்லுக், டைட்டில் வீடியோக்கள் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றது.
ரசிகர்களின் வரவேற்பை பெற்றுள்ள இப்படம் அடுத்தாண்டு ஜனவரி மாதம் 24-ந்தேதி வெளியிட என படக்குழு திட்டமிட்டுள்ளனர்.
இந்நிலையில் படத்தின் டீசரை படக்குழு தற்பொழுது வெளியிட்டுள்ளது. ஒரு அதிரடி ஆக்ஷன் காட்சிகள் நிறைந்ததாக டீசர் அமைந்துள்ளது. ஓர் இரவில் நடக்கும் கதையாக அமைந்துள்ளது. சீயான் விக்ரமை தேடி எஸ் ஜே சூர்யா அழைகிறார் போல காட்சிகள் அமைந்துள்ளது. டீசர் காட்சிகள் தற்பொழுது இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.