என் மலர்
சினிமா செய்திகள்
என் மவன் தலைவன் ஆன கதை.. மிரட்டி விட்ட நானி.. மாஸ் காட்டும் தி பாரடைஸ் க்ளிம்ப்ஸ் வீடியோ

- ஸ்ரீகாந்த் ஒடேலா இயக்கத்தில் நானி மீண்டும் அவரது 33- வது படமான தி பாரடைஸ் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார்.
- திரைப்படத்தில் சொனாலி குல்கர்னி முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார்.
நானி, கீர்த்தி சுரேஷ் , சமுத்திரகனி, டாம் சாக்கோ போன்ற முன்னணி நடிகர்கள் நடித்து அறிமுக இயக்குநரான ஸ்ரீகாந்த் ஒடேலா இயக்கத்தில் 2023 ஆம் ஆண்டு வெளிவந்த படம் தசரா.
தசரா படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான ஸ்ரீகாந்த் ஒடேலா இயக்கத்தில் நானி மீண்டும் அவரது 33- வது படமான தி பாரடைஸ் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். எஸ்.எல்.வி. சினிமாஸ் இப்படத்தை தயாரிக்கிறது.
தசரா படத்தை போலவே நானி இதிலும் வித்தியாசமான கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார் . படத்தின் முதல் கிளிம்ப்ஸ் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.
நானி இதுவரை பார்த்திராத லுக்கில் இருக்கிறார். இரண்டு மூக்குத்தி, இரட்டை பின்னிய ஜடையுடன் ஒரு கூட்டத்தின் தலைவனாக கிளிம்ப்ஸ் வீடியோவை காட்சிப்படுத்தியுள்ளனர். திரைப்படத்தில் சொனாலி குல்கர்னி முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார்.
படத்தின் ஒளிப்பதிவை ஜி.கே விஷ்ணு மற்றும் படத்தொகுப்பை நவீன் நூலி மெற்ற்கொள்கின்றனர். திரைப்படம் 2026 ஆம் ஆண்டு மார்ச் 26 ஆம் தேதி வெளியாகவுள்ளது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.