என் மலர்
சினிமா செய்திகள்

சிரிப்பால் அதிரும் திரையரங்கம்... Bromance படத்தின் வசூல் விவரம்

- மலையாள இயக்குனரான அருண் டி ஜோஸ் அடுத்ததாக ப்ரோமான்ஸ் {Bromance} திரைப்படத்தை இயக்கியுள்ளார்.
- இப்படம் கடந்த பிப்ரவரி 14 ஆம் தேதி வெளியானது.
மலையாள இயக்குனரான அருண் டி ஜோஸ் அடுத்ததாக ப்ரோமான்ஸ் {Bromance} திரைப்படத்தை இயக்கியுள்ளார். இதற்கு முன் மலையாள வெற்றி திரைப்படமான ஜோ அண்ட் ஜோ திரைப்படத்தை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படம் கடந்த பிப்ரவரி 14 ஆம் தேதி வெளியாகி மக்களிடம் அமோக வரவேற்பை பெற்று வருகிறது. திரைப்படம் மிக நகைச்சுவையான கதைக்களத்தில் அமைந்துள்ளது.
படத்தின் முதல் பாதி சிறு தொய்வாக இருந்தாலும். படத்தின் இரண்டாம் பாதி நகைச்சுவை காட்சிகளும், விறுவிறு திரைக்கதையை கொண்டு அதை சரிக்கட்டியுள்ளனர். சங்கீத் பிரதாபின் நகைச்சுவை காட்சிகளில் திரையரங்குகள் சிரிப்பலையில் அதிருகிறது.
ப்ரோமான்ஸ் திரைப்படத்தில் அர்ஜுன் அசோகன், மாத்யூ தாமஸ், மகிமா நம்பியார், சியாம் மோகன், சங்கீத் பிரதாப் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படத்தின் கதையை அருண், ரவீஷ் நாத் மற்றும் தாமஸ் இணைந்து எழுதியுள்ளனர்.
படத்தின் ஒளிப்பதிவை அகில் ஜார்ஜ், படத்தொகுப்பை சமான் சாக்கோ மற்றும் இசையை கோவிந்த் வசந்தா மேற்கொண்டுள்ளனர். ப்ரோமான்ஸ் திரைப்படத்தை ஆசிக் உஸ்மான் தயாரித்துள்ளார்.
திரைப்படத்தின் வசூல் விவரத்தை படக்குழு வெளியிட்டுள்ளது. திரைப்படம் 4 நாட்களில் 11.78 கோடி ரூபாய் வசூலித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.