என் மலர்
சினிமா செய்திகள்
X
"லியோ" காலை 7 மணி காட்சிக்கு அனுமதி உண்டா? - தமிழக அரசு பதில்
Byமாலை மலர்18 Oct 2023 9:52 AM IST (Updated: 18 Oct 2023 10:01 AM IST)
- நடிகர் விஜய் நடித்த லியோ திரைப்படம் நாளை வெளியாகிறது.
- லியோ திரைப்படத்துக்கு 5 காட்சிகள் திரையிட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
சென்னை:
நடிகர் விஜய் நடித்த, இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கிய லியோ திரைப்படம் நாளை வெளியாகிறது.
லியோ திரைப்படத்துக்கு 4 நாட்கள் நாள்தோறும் 5 காட்சிகள் திரையிட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
புதுவையில் ரசிகர்கள் சார்பில் 19-ம் தேதி காலை 7 மணிக்கு சிறப்பு காட்சிக்கு அனுமதி கோரி மனு அளிக்கப்பட்டது. இதையடுத்து சிறப்பு காட்சிக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது என கலெக்டர் வல்லவன் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், காலை 7 மணி காட்சிக்கு தமிழக அரசு அனுமதி மறுத்துள்ளது. காலை 9 மணிக்கான டிக்கெட் முன்பதிவு ஆன்லைனில் ஏற்கனவே முடிவடைந்து விட்டது என நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
Next Story
×
X