என் மலர்
சினிமா செய்திகள்
மும்பையில் டி.வி. சீரியல் நடிகர் விபத்தில் பலி
- மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதி விபத்து.
- படுகாயம் அடைந்த நிலையில் மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில் உயிரிழப்பு
மும்பையைச் சேர்ந்த டி.வி. நடிகர் அமான் ஜெய்ஸ்வால். 23 வயதான இவர் மும்பையின் ஜோகேஷ்வரி சாலையில் நேற்று மதியம் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தபோது, திடீரென மோட்டார் சைக்கிள் மீது லாரி பயங்கரமாக மோதி விபத்துக்குள்ளானது.
இதில் அமான் ஜெய்ஸ்வால் படுகாயம் அடைந்தார். படுகாயம் அடைந்த அவர் அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். ஆனால் படுகாயம் அடைந்த அவர் சிறிது நேரத்திலேயே உயிரிழந்தார்.
கவனக்குறைவாக வாகனம் ஓட்டுதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் லாரி டிரைவருக்கு எதிராக வழக்குப்பதிவு செய்த போலீசார் விபத்து தொடர்பாக விசாரணை நடத்தி வருகிறார்கள். இவர் தர்திபுத்ரா நந்தினி என தொலைக்காட்சி தொடரில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.