என் மலர்
சினிமா செய்திகள்
சியான் 61: விக்ரமுடன் இணையும் விஜய் பட நடிகை
- இயக்குனர் பா.இரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடிக்கும் படம் ‘சியான் 61’.
- இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் விரைவில் வெளியாகவுள்ளதாக கூறப்படுகிறது.
மணிரத்னம் இயக்கத்தில் சில தினங்களுக்கு முன்பு வெளியான பொன்னியின் செல்வன்-1 திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இதில் விக்ரம் நடித்த ஆதித்த கரிகாலன் கதாபாத்திரம் ரசிகர்கள் மத்தியில் பெரும் பாராட்டுக்களை பெற்றது.
இதைத்தொடர்ந்து, பா.இரஞ்சித் இயக்கும் படத்தில் விக்ரம் நடிக்கபோவதாக அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியானது. 'சியான் 61' என தற்காலிகமாக பெயரிடப்பட்டுள்ள இப்படத்தை ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் சார்பில் கே.இ.ஞானவேல்ராஜா, நீலம் புரொடக்ஷன்ஸ் உடன் இணைந்து தயாரிக்கிறார். ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கும் இப்படத்தின் பூஜை அண்மையில் நடைபெற்றது. இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் விரைவில் வெளியாகவுள்ளதாகவும் இதன் டெஸ்ட் ஷூட் நடைபெற்று வருவதாகவும் தகவல் வெளியானது.
இந்நிலையில் சியான் 61 படத்தின் கதாநாயகி குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி தமிழில் மாஸ்டர், பேட்ட, மாறன் போன்ற படங்களில் கதாநாயகியாக நடித்து பிரபலமடைந்த மாளவிகா மோகனன் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. இதுகுறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.