search icon
என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    முதலமைச்சருக்கும் இதன் பின்புலத்திலிருந்த அறிவுப்புலத்தார்க்கும் நன்றி - வைரமுத்து
    X

    முதலமைச்சருக்கும் இதன் பின்புலத்திலிருந்த அறிவுப்புலத்தார்க்கும் நன்றி - வைரமுத்து

    • தமிழ் நிலத்தில் 5,300 ஆண்டுகளுக்கு முன்னாடியே உருக்கு இரும்பு தொழில்நுட்பம் அறிமுகம் ஆகிவிட்டது.
    • அண்மையில் கிடைக்கப்பெற்ற காலக் கணக்கீடுகள், இரும்பு அறிமுகம் ஆன காலத்தை கி.மு.4000 ஆண்டின் முதற்பகுதிக்கு கொண்டு சென்றிருக்கிறது.

    தமிழ் நிலத்தில் 5,300 ஆண்டுகளுக்கு முன்னாடியே உருக்கு இரும்பு தொழில்நுட்பம் அறிமுகம் ஆகிவிட்டது. இப்போது தமிழ்நாட்டில் மேற்கொள்ளப்பட்ட அகழாய்வுகள் மூலம், அண்மையில் கிடைக்கப்பெற்ற காலக் கணக்கீடுகள், இரும்பு அறிமுகம் ஆன காலத்தை கி.மு.4000 ஆண்டின் முதற்பகுதிக்கு கொண்டு சென்றிருக்கிறது.

    தென் இந்தியாவில் குறிப்பாக தமிழ்நாட்டில் 5,300 ஆண்டுகளுக்கு முன்னால் இரும்பு அறிமுகம் ஆகி இருக்கும் என்று உறுதியாக சொல்லலாம். இதை ஆய்வின் முடிவுகளாகவே நான் அறிவிக்கிறேன் என தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நேற்று தெரிவித்து இருந்தார்.

    இந்நிலையில் கவிஞர் வைரமுத்து வெளியிட்டுள்ள எக்ஸ் தளத்தில் பதிவில்,

    இரும்பின் தொழில்நுட்பம்

    5300 ஆண்டுகட்கு முன்பே

    தமிழ்மண்ணில்

    புழக்கத்திற்கு வந்துவிட்டது

    என்ற பிரகடனத்தை

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

    வெளியிட்டபோது

    அவர் குரலிலும் முகத்திலும்

    தொனித்தது

    ஒட்டுமொத்தத் தமிழினத்தின்

    பெருமிதம் அல்லவா?

    உலக ஆய்வகங்களின்

    கதிரியக்கப்

    பகுப்பாய்வுக்குப் பிறகு

    இந்தத் தொன்மை

    உண்மையென்று

    உணர்த்தப்பெற்றுள்ளது

    தீ இரும்பு சக்கரம் என்ற

    கண்டுபிடிப்புகளே

    மனிதகுல வரலாற்றை

    வளைத்துத் திருப்பியவை

    இதில் இரும்பின் இடம்

    உறுதியானது

    திருவள்ளுவர் இரும்பைப்

    பொன் என்று சுட்டுகிறார்

    "தூண்டில் பொன்

    மீன்விழுங்கி யற்று" என்கிறார்

    இந்தப் பெருமை

    இந்திய நாகரிகத்துக்குத்

    தமிழர் முன்னோடி என்பதை

    உறுதிசெய்யும்

    முதலமைச்சருக்கும்

    இதன் பின்புலத்திலிருந்த

    அறிவுப்புலத்தார்க்கும்

    நல்வணக்கம் செலுத்தி

    நன்றிசொல்கிறேன்

    இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×