என் மலர்
சினிமா செய்திகள்
விடாமுயற்சி மிகவும் பிரம்மாண்டமாக இருக்க போகிறது - இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் பதிவு
- அஜித் குமார் - மகிழ் திருமேனி கூட்டணியில் உருவாகி இருக்கும் திரைப்படம் விடாமுயற்சி
- இப்படத்தில் அஜித்குமாருக்கு ஜோடியாக திரிஷா நடித்துள்ளார்.
நடிகர் அஜித் குமார் மற்றும் இயக்குநர் மகிழ் திருமேனி கூட்டணியில் உருவாகி இருக்கும் திரைப்படம் "விடாமுயற்சி." இந்தப் படத்தில் அஜித் குமாருடன், ஆரவ், அர்ஜுன், திரிஷா, ரெஜினா கசான்ட்ரா, நிகில் நாயர் மற்றும் பலர் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.
லைகா நிறுவனம் தயாரித்துள்ள இப்படம் பொங்கலுக்கு வெளியாகும் என ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தவிர்க்க முடியாத காரணங்களால் படத்தை வெளியிட முடியவில்லை என்று தயாரிப்பு நிறுவனம் தெரிவித்தது. இதனால் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.
இந்நிலையில், விடாமுயற்சி படத்தின் டிரெய்லர் தற்பொழுது வெளியாகியுள்ளது. அந்த டிரெய்லரில் விடாமுயற்சி திரைப்படம் பிப்ரவரி 6 ஆம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.
இதனையடுத்து 'விடாமுயற்சி மிகவும் பிரம்மாண்டமாக இருக்கப் போகிறது' என்று குட் பேட் அக்லி படத்தின் இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
#Vidaamuyarchi Trailer is ????? this is going to be massive …Get ready for Epic intense Thriller??International Quality ??? KING arrives on February 6th????? FDFS?❤️??? https://t.co/1MMCMnSLYb
— Adhik Ravichandran (@Adhikravi) January 16, 2025