என் மலர்
சினிமா செய்திகள்
'விடாமுயற்சி' படத்தின் 'தனியே' பாடல் வெளியானது
- விடாமுயற்சி நாளை (பிப்ரவரி 6) உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் வெளியாகிறது.
- விடாமுயற்சி' படத்தின் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்ய ரசிகர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
நடிகர் அஜித் குமார் மற்றும் இயக்குநர் மகிழ் திருமேனி கூட்டணியில் உருவாகி இருக்கும் திரைப்படம் "விடாமுயற்சி." இந்தப் படத்தில் அஜித் குமாருடன், ஆரவ், அர்ஜுன், திரிஷா, ரெஜினா கசான்ட்ரா, நிகில் நாயர் மற்றும் பலர் நடித்துள்ளனர்.
இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். லைகா நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்திற்கு யு/ஏ சான்றிதழை தணிக்கைக்குழு வழங்கி உள்ளது. இப்படத்தின் டிரெய்லர், பிடிஎஸ் வீடியோக்கள் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றது.
இதனை தொடர்ந்து ரசிகர்களின் பலத்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இப்படம் நாளை (பிப்ரவரி 6) உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் வெளியாகிறது. நாளை 'விடாமுயற்சி' வெளியாவதை அடுத்து படத்தின் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்ய ரசிகர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
'விடாமுயற்சி' நாளை வெளியாகும் நிலையில் படத்திற்கான ப்ரொமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், 'விடாமுயற்சி' படத்தின் 'தனியே' பாடல் வெளியாகியுள்ளது.
வாழ்க்கையில் மனமுடைந்த நிலையில் இருப்பவர்களுக்கு இப்பாடல் சமர்ப்பணம் என இசையமைப்பாளர் அனிருத் தனது எக்ஸ் பக்கத்தில் உருக்கமாக பதிவிட்டுள்ளார்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
#Thaniye - The emotion of #Vidaamuyarchi ❤️?❤️?❤️?https://t.co/O2vq7ABPQoDearest Ak sir #MagizhThirumeni ⚡️⚡️⚡️@trishtrashers @akarjunofficial @ReginaCassandra Dedicated to everyone who has been through a heartbreak in life ❤️?And of course there are many more tracks to come…
— Anirudh Ravichander (@anirudhofficial) February 5, 2025