search icon
என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    சர்வதேச தரம்.. படம் பயங்கரம்.. இயக்குநர் விக்னேஷ் சிவனின் விடாமுயற்சி ரிவ்யூ
    X

    சர்வதேச தரம்.. படம் பயங்கரம்.. இயக்குநர் விக்னேஷ் சிவனின் "விடாமுயற்சி" ரிவ்யூ

    • ரசிகர்களை போலவே திரைப்பிரபலங்களும் திரைப்படத்தை காண குவிந்தனர்.
    • மகிழ்திருமேனி சார் திரைக்கதையை மிகவும் இறுக்கமாக்கி இருக்கிறார்.

    கடந்த 2023-ம் ஆண்டு ஜனவரி 11-ந்தேதி பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 'துணிவு' திரைப்படம் வெளியாகி இருந்தது. அதற்கு பிறகு 2 ஆண்டுகள் கழித்து நேற்று தான் நடிகர் அஜித்தின் திரைப்படம் திரைக்கு வந்துள்ளது.

    பல தடைகளை தாண்டி நடிகர் அஜித் நடித்து, மகிழ்திருமேனி இயக்கத்தில் உருவாகியுள்ள 'விடாமுயற்சி' திரைப்படம் நேற்று திரையரங்குகளில் வெளியானது. இதனால் இந்த திரைப்படத்தை ஒரு திருவிழா போன்றே அஜித் ரசிகர்கள் கொண்டாடினர். ரசிகர்களை போலவே திரைப்பிரபலங்களும் திரைப்படத்தை காண குவிந்தனர்.



    இந்த நிலையில், 'விடாமுயற்சி' படத்தை பார்த்த இயக்குநர் விக்னேஷ் சிவன் தனது இன்ஸ்டா பதிவில் படத்தை பாராட்டியுள்ளார். அதில் கூறியிருப்பதாவது:-

    "'விடாமுயற்சி' ஒரு த்ரில்லர்! ஒரு புதிரைத் தீர்ப்பது போல, முதல் பிரேமிலிருந்து கடைசி பிரேம் வரை கவர்ந்திழுக்கிறது !! AK சாரின் திரை நடிப்பு, அவரது மென்மையான தன்மை முழு படத்தையும் தனது தோள்களில் சுமந்து செல்கிறது!

    யதார்த்தம் கலந்த ஆபத்தான ஆக்ஷன் காட்சி முதல் கடைசி காட்சி எமோஷன் வரை அவர் கதாபாத்திரத்தை மிகவும் நேர்மையாக நடிக்கிறார்! மிகவும் உண்மையாக இருந்தது.

    கிங் அனிருந்தின் அற்புதமான இசையுடன் அவர் திரையில் நடந்து வரும் ஒவ்வொரு முறையும் நீங்களால் விசில் அடிப்பதை நிறுத்த முடியாது! மகிழ்திருமேனி சார் திரைக்கதையை மிகவும் இறுக்கமாக்கி இருக்கிறார். மேலும் மிகவும் கடினமான நிலப்பரப்பில் கூட காட்சிகளும் நிலைத்தன்மை சீராக இருக்கும் விதம் கடின உழைப்பை நிரூபிக்கும் வகையில் அமைந்து இருகிறது!!

    படத்தை மிகவும் சிறப்பாகக் காட்டியதற்காக ஓம்பிரகாஷ், நீரவ் ஆகியோருக்கு நன்றி! உண்மையிலேயே சர்வதேச தரம்! திரிஷா, ரெஜினா, அர்ஜுன், ஆரவ் மற்றும் அனைவரின் நடிப்பும் சிறப்பு! ஒரு பெரிய வெற்றிக்கு பாராட்டுகள்," என கூறியுள்ளார்.



    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    Next Story
    ×