என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
சினிமா செய்திகள்
![சூர்யா குரலில் விஜய் தேவரகொண்டாவின் VD12 படத்தின் டைட்டில் டீசர் வெளியானது சூர்யா குரலில் விஜய் தேவரகொண்டாவின் VD12 படத்தின் டைட்டில் டீசர் வெளியானது](https://media.maalaimalar.com/h-upload/2025/02/12/9232347-kingdom.webp)
சூர்யா குரலில் விஜய் தேவரகொண்டாவின் 'VD12' படத்தின் டைட்டில் டீசர் வெளியானது
![மாலை மலர் மாலை மலர்](/images/authorplaceholder.jpg?type=1&v=2)
- இப்படத்திற்காக கடுமையாக உடற்பயிற்சி செய்து விஜய் தேவரகொண்டா சிக்ஸ் பேக் வைத்துள்ளார்.
- இத்திரைப்படம் மே 30ம் தேதி வெளியாகவுள்ளது
விஜய் தேவரகொண்டா தற்போது 'VD 12' எனும் திரைப்படத்தில் நடித்துள்ளார். இத்திரைப்படத்தை இயக்குநர் கௌதம் தின்னனுரி இயக்கியுள்ளார். இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இந்த திரைப்படத்தை ஸ்ரீ காரா ஸ்டுடியோஸ் வழங்குகிறது.
கௌதம் தின்னனுரி இதற்கு முன் 'ஜெர்ஸி' & 'மல்லி ராவா' ஆகிய படங்களை இயக்கி, அதற்கு தேசிய விருது வென்றது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், விஜய் தேவரகொண்டா 'VD 12' படத்திற்கு கிங்டம் என பெயரிடப்பட்டுள்ளது. இப்படத்தின் டைட்டில் டீசரை படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது. இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் வெளியாகவுள்ளது. கிங்டம் படத்தின் தமிழ் டீசருக்கு நடிகர் சூர்யா குரல் கொடுத்துள்ளார்.
கிங்டம் படம் அதிரடி ஆக்சன் என்டர்டெய்னராக உருவாகியுள்ளது. இப்படத்திற்காக கடுமையாக உடற்பயிற்சி செய்து விஜய் தேவரகொண்டா சிக்ஸ் பேக் வைத்துள்ளார். இத்திரைப்படம் மே 30ம் தேதி வெளியாகவுள்ளது
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்
This is "KINGDOM"Questions. Mistakes. Bloodshed. Destiny. Telugu — https://t.co/IYwiss0nOP Tamil — https://t.co/EP0i0VtsDhHindi — https://t.co/lBTjr1lxi2May 30, 2025. In theaters WW#Kingdom #VD12 pic.twitter.com/1Gg7riOGzF
— Vijay Deverakonda (@TheDeverakonda) February 12, 2025