search icon
என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    90 வயதிலும் நடனமாடும் வைஜெயந்திமாலா- வைரலாகும் வீடியோ
    X

    90 வயதிலும் நடனமாடும் வைஜெயந்திமாலா- வைரலாகும் வீடியோ

    • மக்களவை, மாநிலங்களவை என இரண்டிலும் வைஜெயந்தி மாலா எம்.பி.யாக பணியாற்றினார்.
    • 90 வயதாகும் வைஜெயந்தி மாலா பரதம் ஆடி வெளியிட்ட வீடியோ தற்போது வைரலாக பரவி வருகிறது.

    தமிழில் 1949-ம் ஆண்டு ஏ.வி.எம். நிறுவனம் தயாரித்த 'வாழ்க்கை' படத்தின் மூலம் சினிமாவுக்கு வந்தவர் வைஜெயந்தி மாலா. 'இரும்புத்திரை', 'பார்த்திபன் கனவு', 'தேன் நிலவு' 'பாக்தாத் திருடன்', 'சித்தூர் ராணி பத்மினி' போன்ற காலத்தால் அழியாத பல படங்களில் நடித்துள்ளார்.

    'வஞ்சிக்கோட்டை வாலிபன்' படத்தில் 'கண்ணும் கண்ணும் கலந்து...' என்ற பாடலுக்கு 'நாட்டிய பேரொளி' பத்மினியுடன் இணைந்து அவர் ஆடிய போட்டி பாடல், ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுத் தந்தது. பல வெற்றிப்படங்களில் நடித்து பாலிவுட்டில் நம்பர் ஒன் நடிகையாக ஜொலித்தார். தெலுங்கு, வங்காள மொழி படங்களிலும் நடித்துள்ளார்.

    சென்னையில் பிறந்து வளர்ந்த அவர், சினிமா தாண்டி அரசியலிலும் ஜொலித்தார். மக்களவை, மாநிலங்களவை என இரண்டிலும் எம்.பி.யாக பணியாற்றினார். பின்னர் அரசியலில் இருந்து ஒதுங்கியே இருந்தார். 90 வயதாகும் வைஜெயந்திமாலா சமீபத்தில் பரதம் ஆடி வெளியிட்ட வீடியோ தற்போது வைரலாக பரவி வருகிறது.

    இந்த வயதிலும் அவரது நடன அசைவுகள் 'அடடா...' என்றே சொல்ல வைக்கிறது. இதனை திரை பிரபலங்களும், ரசிகர்களும் ஷேர் செய்தும், வாழ்த்துகள் தெரிவித்து பாராட்டியும் வருகிறார்கள்.

    Next Story
    ×