என் மலர்
சினிமா செய்திகள்
சொர்கத்துக்கு சாவி கிடைச்சா என்ன பண்ணுவீங்க? .. சிறைசாலை பின்னணியில் `சொர்கவாசல்' டிரெய்லர் வெளியீடு
- ஆர்.ஜே. பாலாஜி சூர்யாவின் 45 வது படத்தை இயக்க உள்ளதாக அறிவிப்பு வெளியானது.
- ஆர்.ஜே பாலாஜி முற்றிலும் மாறுபட்ட தோற்றத்தில் காணப்படுகிறார்.
நடிப்பு, இயக்கம் என பிஸியாக இயங்கி வரும் ஆர்.ஜே. பாலாஜி சூர்யாவின் 45 வது படத்தை இயக்க உள்ளதாக அறிவிப்பு வெளியானது. இந்நிலையில் ஆர்.ஜே. பாலாஜி சொர்கவாசல் திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார். படத்தின் ஃபர்ஸ்ட்லுக்கை இயக்குனர் பா.ரஞ்சித் வெளியிடத்தில் இருந்தே படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரிக்கத் தொடங்கியது.
சமீபத்தில் வெளியான படத்தின் டீசர் வித்தியாசமான முறையில் இருந்ததும் ரசிகர்களைக் கவர்ந்தது. பா. ரஞ்சித்தின் உதவி இயக்குநர் சித்தார்த் விஸ்வநாத் இயக்கியுள்ள இந்த படம் ஜெயிலில் நடக்க கூடிய கதைக்களத்துடன் அமைந்துள்ளது. ஆர்.ஜே பாலாஜி முற்றிலும் மாறுபட்ட தோற்றத்தில் காணப்படுகிறார். கருணாஸ், செல்வராகவன், பாலாஜி சக்திவேல் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
படம் வரும் நவம்பர் 29ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. திரைப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா இன்று சென்னையில் நடைப்பெற்றது. இவ்விழாவின் சிறப்பு விருந்தினராக இயக்குனர் லோகேஷ் கனகராஜ் மற்றும் அனிருத் கலந்துக் கொண்டனர்.
படத்தின் டிரெய்லர் காட்சிகள் மிகவும் விறுவிறுப்பாக ஆக்ஷன் நிறைந்த காட்சிகளால் நிறைந்துள்ளது. திரைப்படத்தின் மீது ரசிகர்களுக்கு எதிர்ப்பார்ப்பு அதிகரித்துள்ளது. ஆர் ஜே பாலாஜிக்கு இப்படம் மிகப்பெரிய திருப்புமுனையாக அமையும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. தமிழ் சினிமாவில் இதுவரை காணாத சிறையில் நடக்கும் வன்முறை மற்றும் சிறையில் இருந்து தப்பிக்கும் கதைக்களத்தை மையமாக இயக்கப்பட்ட திரைப்படமாகும்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.