என் மலர்
சினிமா செய்திகள்
படத்துக்கு யார்தான் ஹீரோ? - கூல் சுரேஷுக்கும் விபூதி அடித்த மஞ்சள் வீரன் இயக்குனர்
- டிடிஎஃப் வாசன் தமிழ் திரையுலகில் கதாநாயகனமாக அறிமுகமாக இருந்த திரைப்படம் 'மஞ்சள் வீரன்.'
- கூல் சுரேஷ் இந்தப் படத்தின் கதாநாயகனாக நடிப்பதாக கடந்த மாதம் தகவல் வெளியானது.
பிரபல யூடியூபரும், சர்ச்சைகளுக்கு பெயர் பெற்றவருமான டிடிஎஃப் வாசன் தமிழ் திரையுலகில் கதாநாயகனமாக அறிமுகமாக இருந்த திரைப்படம் 'மஞ்சள் வீரன்.' செல் அம் இயக்கும் இந்தப் படத்தின் பூஜை போடப்பட்டு, படப்பிடிப்பு பணிகள் துவங்கியதாக சொல்லப்பட்டது.
எனினும், பல்வேறு காரணங்களால் 'மஞ்சள் வீரன்' படத்தில் இருந்து டிடிஎப் வாசன் நீக்கப்பட்டார். படத்திற்கு ஒத்துழைப்பு வழங்கவில்லை என்ற காரணத்தால் டிடிஎப் வாசன் நீக்கப்பட்டதாக படத்தின் இயக்குநர் செல் அம் தெரிவித்து இருந்தார். இதுக்குறித்து இரு தரப்பினரிடமும் இருந்து பயங்கர விவாதம் ஏற்பட்டது.
'மஞ்சள் வீரன்' படத்தில் இருந்து நீக்கப்பட்ட டிடிஎப் வாசனுக்கு பதிலாக கூல் சுரேஷ் இந்தப் படத்தின் கதாநாயகனாக நடிப்பதாக கடந்த மாதம் தகவல் வெளியானது. இதுக்குறித்து சமூக வலைத்தளங்களில் சில புகைப்படங்களும் வெளியானது.
இந்நிலையில் மஞ்சள் வீரன் படத்தின் புதிய ஹீரோ கூல் சுரேஷ் இல்லை. கூல் சுரேஷ்க்கும் மஞ்சள் வீரனுக்கும் எந்த சம்மந்தமும் இல்லை. நவம்பர் அல்லது டிசம்பர் மாத இறூதியில் மஞ்சள் வீரன் படத்தின் கதாநாயகனையும் , படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கையும் அறிமுகப்படுத்துவேன் என இயக்குனர் செல்அம் தெரிவித்துள்ளார்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.