என் மலர்
சினிமா செய்திகள்
குட் பேட் அக்லி படப்பிடிப்பில் அஜித்துடன் எடுத்துக்கொண்ட வீடியோவை பகிர்ந்த யோகி பாபு
- அஜித் நடிக்கும் குட் பேட் அக்லி திரைப்படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கி வருகிறார்.
- குட் பேட் அக்லி திரைப்படத்தில் யோகி பாபு இணைந்துள்ளார்.
கடந்த ஆண்டு ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் வெளிவந்த 'மார்க் ஆண்டணி' மிகப்பெரிய ஹிட் அடித்தது. அப்படத்தில் விஷால், எஸ்.ஜே.சூர்யா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்தனர்.
இதை தொடர்ந்து அஜித் நடிக்கும் குட் பேட் அக்லி திரைப்படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தில் அஜித் மூன்று கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். திரைப்படத்தில் திரிஷா கதாநாயகியாக நடித்துள்ளார்.
இப்படத்தில் நடிகர் பிரசன்னா மற்றும் அர்ஜூன் தாஸ் மற்றும் யோகி பாபு ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து வருகின்றனர்.
இந்நிலையில் குட் பேட் அக்லி சூட்டிங்கின்போது நடிகர் அஜித்துடன் எடுத்து கொண்ட வீடியோவை யோகி பாபு தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
Thank you ajith sir????..#GoodBadUgly #GoodBadUgly pic.twitter.com/o45maahqub
— Yogi Babu (@iYogiBabu) December 11, 2024