என் மலர்
சினிமா
சூர்யாவுக்கு பதில் தனுஷ்?- புறநானூறு அப்டேட்
- அதனைத்தொடர்ந்து தற்போது கார்த்திக் சுப்புராஜ் இயக்கும் புதிய படத்தில் நடித்து வருகிறார்.
- தனது 50-வது படமான ‘ராயன்' படத்தை இயக்கி நடித்தும் வருகிறார்.
'சூரரை போற்று' படத்துக்கு பிறகு, சுதா கொங்கரா இயக்கத்தில் மீண்டும் சூர்யா இணையப்போவதாக தகவல்கள் வெளியானது. இந்த புதிய படத்துக்கு 'புறநானூறு' என்று பெயர் சூட்டப்பட்டிருப்பதாகவும் கூறப்பட்டது.
முதற்கட்ட படப்பிடிப்பு தொடங்க இருந்த நிலையில், படம் கைவிடப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இதனால் ரசிகர்களும் ஏமாற்றம் கொண்டனர்.
இதனைத்தொடர்ந்து சிறுத்தை சிவா இயக்கத்தில் 'கங்குவா' படத்தில் சூர்யா ஒப்பந்தமானார். அதனைத்தொடர்ந்து தற்போது கார்த்திக் சுப்புராஜ் இயக்கும் புதிய படத்தில் நடித்து வருகிறார்.
இந்தநிலையில் கிடப்பில் போடப்பட்ட 'புறநானூறு' படத்துக்கு மீண்டும் உயிர் கொடுத்திருப்பதாகவும், இந்த படத்தில் சூர்யாவுக்கு பதில் தனுஷ் நடிக்க போகிறார் என்றும் தகவல் வெளியாகி இருக்கிறது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகலாம் என்றும் கூறப்படுகிறது.
தனுஷ் தற்போது சேகர் கம்முலா இயக்கத்தில் 'குபேரா' படத்தில் நடித்து வருகிறார். மேலும் தனது 50-வது படமான 'ராயன்' படத்தை இயக்கி நடித்தும் வருகிறார்.
இந்த படங்களை முடித்துவிட்டு சுதா கொங்கரா இயக்கும் 'புறநானூறு' படத்தில் தனுஷ் நடிக்கவுள்ளதாக தகவல் பரவி உள்ளது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.