என் மலர்
OTT
புரட்டி எடுக்கும் பேய் மழை.. வெளிய போகாம ஓடிடி-யில் இந்த வார ரிலீச பாருங்க
- வெங்கி அட்லுரி இயக்கத்தில் துல்கர் சல்மான் நடிப்பில் "லக்கி பாஸ்கர்" வெளியானது.
- சிவபாலன் முத்துகுமார் இயக்கத்தில் கவின் நடிப்பில் வெளியான படம் 'பிளடி பெக்கர்'.
என்னதான் திரைப்படம் திரையரங்கில் ரிலீஸ் ஆனாலும்,, அதை ஓடிடி-யில் பார்க்க என ஒரு தனி கூட்டமே உள்ளது. திரையரங்கில் வெற்றி திரைப்படமாக அமையாத பல திரைப்படங்கள் ஓடிடி வெளியீட்டின் பிறகு மக்களின் கவனத்தை பெற்றுள்ளது.
இப்போ அடிக்கிற மழையில் வீட்டில் அனைவரும் அமர்ந்து பிடித்த உணவை சாப்பிட்டு இந்த வார ஓடிடியில் என்ன படம் பாக்கலாம்-ன்னு பார்ப்போம்
'ராக்கெட் டிரைவர்'
ஸ்டோரீஸ் பை தி ஷோர் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் அனிருத் வல்லப் தயாரித்துள்ள படம் "ராக்கெட் டிரைவர்". இந்த படத்தை அறிமுக இயக்குனர் ஸ்ரீராம் அனந்த சங்கர் இயக்கியுள்ளார். பேண்டசி, டிராமா-காமெடி என்டர்டெயினர் கதையம்சம் கொண்ட இந்த படத்தில் விஷ்வந்த் முதன்மை பாத்திரத்தில் நடித்துள்ளார். நடிகை சுனைனா, ஜெகன் நாக விஷால், காத்தாடி ராமமூர்த்தி மற்றும் பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இப்படம் ஆஹா தமிழ் ஓ.டி.டி தளத்தில் கடந்த 25-ந் தேதி வெளியானது.
'அந்தகன்'
பாலிவுட்டில் ஸ்ரீராம் ராகவன் இயக்கத்தில் வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட்டான 'அந்தாதூன்' படத்தின் ரீமேக்காக 'அந்தகன்' திரைப்படம் உருவாகியுள்ளது. இதில் கதாநாயகனாக பிரசாந்த் நடித்துள்ளார். இந்த படத்தில் சிம்ரன், வனிதா, இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார், யோகிபாபு, பிரியா ஆனந்த், சமுத்திரக்கனி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். பிரசாந்தின் தந்தை தியாகராஜன் இயக்கியுள்ள இந்த படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். கிரைம் திரில்லர் கதைக்களத்தில் இப்படம் உருவாகி உள்ளது. இப்படம் கடந்த 26-ந் தேதி அமேசான் பிரைம் ஓ.டி.டி தளத்தில் வெளியானது
'தீபாவளி போனஸ்'
நடிகர் விக்ராந்த் நடிப்பில் ஜெயபால் இயக்கத்தில் வெளியான படம் 'தீபாவளி போனஸ்'. இந்த படத்தில் கதாநாயகியாக ரித்விகா நடித்துள்ளார். ஸ்ரீ அங்காளி பரமேஸ்வரி புரொடக்சன்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரித்துள்ளது. இந்த படத்தில் பன்னீர்செல்வம், வெங்கட்ராமன் பாலாஜி, மாலிக் ரபிக் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இப்படம் கிராமத்து கதைக்களத்தில் உருவாகியுள்ளது. இப்படம் கடந்த 26-ந் தேதி ஆஹா தமிழ் மற்றும் சிம்பிலி சவுத் ஓ.டி.டி தளங்களில் வெளியாகி உள்ளது.
'லக்கி பாஸ்கர்'
வெங்கி அட்லுரி இயக்கத்தில் துல்கர் சல்மான் நடிப்பில் "லக்கி பாஸ்கர்" வெளியாகி உள்ளது.இந்தப் படத்தை சித்தாரா என்டர்டெயின்மென்ட் நிறுவனமும் பார்ச்சூன் போர் சினிமாஸ் நிறுவனமும் இணைந்து தயாரித்துள்ளது. இதில் துல்கர் சல்மான் உடன் இணைந்து மீனாட்சி சவுத்ரி நடித்துள்ளார். இப்படம் சாதாரண நபரான நாயகன் அரசு மற்றும் வங்கி நிர்வாகத்தை ஏமாற்றி பெரும் செல்வந்தனாக மாறும் கதையாக உருவாகி உள்ளது. இப்படம் 28-ந் தேதி நெட்பிளிக்ஸ் ஓ.டி.டி தளத்தில் வெளியானது.
'கா'
சுதீப் மற்றும் சுஜித் இயக்கத்தில் தீபாவளியன்று வெளியான படம் 'கா'. இவர்கள் இயக்கிய முதல் படம் இதுவாகும். இதில் கிரண் அப்பாவரம் கதாநாயகனாகவும், தன்வி ராம் மற்றும் நயன் சரிகா என இரண்டு கதாநாயகிகளும் நடித்தனர். ஸ்ரீசக்ராஸ் எண்டர்டெயின்மெண்ட்ஸ் தயாரித்த இப்படத்திற்கு சாம் சிஎஸ் இசையமைத்துள்ளார். திரில்லர் கதைக்களத்தில் உருவாகியுள்ள இப்படம் நேற்று இடிவி வின் ஓ.டி.டி தளத்தில் வெளியானது.
'பிளடி பெக்கர்'
நெல்சன் திலிப்குமாரிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய சிவபாலன் முத்துகுமார் இயக்கத்தில் கவின் நடிப்பில் வெளியான படம் 'பிளடி பெக்கர்'. இப்படத்தில் கவினுடன் ரெடின் கிங்ஸ்லி, மாருதி பிரகாஷ்ராஜ், சுனில் சுகாதா, அக்சயா ஹரிஹரன் மற்றும் பலர் நடித்துள்ளனர். இதில் கவின் 'பிச்சைக்காரன்' கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். டார்க் காமெடி கதைக்களத்தில் உருவாகியுள்ள இப்படம் இன்று அமேசான் பிரைம், டென்டுகொட்டா, சன் நெக்ஸ்ட் போன்ற ஓ.டி.டி தளங்களில் வெளியாகி உள்ளது.
'பிரதர்'
ஜெயம் ரவி நடிப்பில் ஸ்கிரீன் சீன் மீடியா என்டர்டைன்மென்ட் தயாரித்துள்ள படம் 'பிரதர்'. இந்த படம் அனைத்து தரப்பு ரசிகர்களும் கண்டு மகிழக்கூடிய வகையில் கலகலப்பான குடும்ப படமாக உருவாகியுள்ளது. பிரியங்கா மோகன் கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும் நட்டி, பூமிகா, சரண்யா பொன்வண்ணன், விடிவி கணேஷ், சீதா, அச்யுத் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு ஹாரில் ஜெயராஜ் இசையமைத்துள்ளார். இப்படம் இன்று ஜீ5 ஓ.டி.டி தளத்தில் வெளியாக உள்ளது.
'விகடகவி'
பிரதீப் மடலி இயக்கத்தில் நரேஷ் அகஸ்தியா மற்றும் மேகா ஆகாஷ் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ள தொடர் 'விகடகவி'. இந்த தொடர் பீரியட் திரில்லர் கதைக்களத்தில் உருவாகி உள்ளது. பிரபல திரைப்பட தயாரிப்பாளர் ராம் தல்லூரி இந்த தொடரை தயாரித்துள்ளார். நரேஷ் அகஸ்தியா விக்டகவியாக நடித்துள்ளார், அவர் ஒரு சிறிய கிராமத்தில் ஒரு துப்பறியும் நபராக நடித்துள்ளார். இந்த தொடர் ஜீ 5 ஓ.டி.டி தளத்தில் வெளியாகி உள்ளது.
'பாராசூட்'
இயக்குனர் ராசு ரஞ்சித் இயக்கத்தில் கிஷோர் நடித்துள்ள புதிய வெப்சீரிஸ் 'பாராசூட்'. இதில் நடிகர் கிஷோர் குழந்தைகளின் தந்தையாகவும், பிரபல நடிகை 'குக் வித் கோமாளி' கனி குழந்தைகளுக்கு அம்மாவாகவும், நடிகர் கிருஷ்ணா குலசேகரன் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இந்த வெப் தொடர் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் ஓ.டி.டி தளத்தில் வெளியாக உள்ளது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.