என் மலர்
OTT
இந்த வார ஓடிடியில் என்ன பார்க்கலாம் ?
- திரையரங்குகளில் கிடைக்கும் வரவேற்புக்கு இணையாக ஓடிடியில் வரவேற்பு கிடைக்கிறது
- இந்த வாரம் ஓடிடி தளங்களில் என்ன பார்க்கலாம் என இந்த செய்தில் பார்க்கலாம்.
ஓடிடியில் வெளியாகும் பிரபல நடிகர்களின் படங்கள் முதல் இளம் நடிகர்களின் படங்கள் வரை அனைத்து மொழி திரைப்படங்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைக்கிறது. திரையரங்குகளில் கிடைக்கும் வரவேற்புக்கு இணையாக ஓடிடியில் வரவேற்பு கிடைக்கிறது. இந்த வாரம் ஓடிடி தளங்களில் என்ன பாக்கலாம்-ன்னு இந்த செய்தில பார்க்கலாம்.
'ஸ்குவிட் கேம் சீசன் 2'
கடந்த 2021-ம் ஆண்டு நெட்பிளிகஸ் ஓடிடி தளத்தில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்ற தொடர் 'ஸ்குவிட் கேம்'. 9 எபிசோடுகளை கொண்ட இந்தத் தொடரை பிரபல இயக்குனர் ஹ்வாங் டாங் - ஹியூக் இயக்கி இருந்தார். இத்தொடரின் இரண்டாம் சீசனுக்கு மக்களிடம் பெரும் எதிர்ப்பார்ப்பு நிலவி வந்த நிலையில் தற்போது இந்தத் தொடரின் 2-வது சீசன் நெட்பிளிக்ஸ் ஓ.டி.டி தளத்தில் வெளியாகி உள்ளது.
'சொர்க்கவாசல்'
பா. ரஞ்சித்தின் உதவி இயக்குநர் சித்தார்த் விஸ்வநாத் இயக்கியுள்ள படம் சொர்க்கவாசல். இந்த படத்தை ஸ்வீப் ரைட் ஸ்டூடியோஸ் தயாரித்துள்ளது. வித்தியாசமான கதாபாத்திரத்தில் ஆர்.ஜே.பாலாஜி இப்படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார். மத்திய சிறைச்சாலையை மையமாக வைத்து 1999-ல் நடந்த உண்மையான கதையை மையமாக வைத்து இப்படம் உருவாகியுள்ளது. இதில், செல்வராகவன், கருணாஸ், பாலாஜி சக்திவேல், எழுத்தாளர் சோஷா சக்தி உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இப்படம் இன்று நெட்பிளிக்ஸ் ஓ.டி.டி தளத்தில் வெளியாகி உள்ளது.
'கிளாடியேட்டர் II'
ரிட்லி ஸ்காட் இயக்கத்தில் ரசல் குரோவ் நடிப்பில் கடந்த 2000-ம் ஆண்டு வெளியான திரைப்படம் 'கிளாடியேட்டர்'. இப்படம் உலகமெங்கும் உள்ள திரையரங்குகளில் வெளியாகி சுமார் 400 மில்லியன் டாலர்கள் வசூலித்து சாதனை படைத்தது. கிட்டத்தட்ட 24 ஆண்டுகளுக்குப் பிறகு 'கிளாடியேட்டர் 2' படத்தினை ரிட்லி ஸ்காட் தற்போது உருவாக்கியுள்ளார். இப்படத்தில், பால் மெஸ்கல், டென்சல் வாஷிங்டன், பெட்ரோ பாஸ்கல் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படம் கடந்த 24-ந் தேதி அமேசான் பிரைம் ஓ.டி.டி தளத்தில் வெளியாகி உள்ளது.
'பகீரா'
கே.ஜி.எப், காந்தாரா, சலார் உள்ளிட்ட படங்களை தயாரித்த ஹொம்பாலே பிலிம்ஸ் தயாரிப்பில் உருவான படம் 'பஹீரா'. இயக்குனர் பிரசாந்த் நீல் கதை எழுதிய இப்படத்தை இயக்குனர் சூரி இயக்கினார். இந்தப் படத்தில் கன்னட நடிகர் ஸ்ரீமுரளி நாயகனாக நடித்திருந்தார். மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான இப்படம் கலவையான விமர்சனங்களையே பெற்றது. இந்த நிலையில் இப்படம் கடந்த 24-ந் தேதி அமேசான் பிரைம் ஓ.டி.டி தளத்தில் வெளியாகி உள்ளது.
'பைரதி ரணகல்'
பிரபல கன்னட நடிகர் சிவராஜ்குமார் நடிப்பில் இயக்குனர் நர்த்தன் இயக்கத்தில் வெளியான படம் 'பைரதி ரணகல்'. 2017 ஆம் ஆண்டு பிளாக்பஸ்டர் ஹிட்டான 'மஃப்டி' படத்தின் தொடர்ச்சியில் இப்படம் உருவாகி உள்ளது. இந்த படத்தில் ருக்மணி வசந்த், ராகுல் போஸ், தேவராஜ், அவினாஷ் மற்றும் பலர் நடித்துள்ளனர். இந்த படம் ஆக்சன் திரில்லர் கதைக்களத்தில் உருவாகி உள்ளது. இப்படம் அமேசான் பிரைம் ஓ.டி.டி தளத்தில் கடந்த 25-ந் தேதி வெளியானது.
'ரூபன்'
இயக்குனர் அய்யப்பன் சுப்ரமணி இயக்கத்தில் விஜய் பிரசாத், காயத்ரி ரேமா, சார்லீ என பல பிரபலங்கள் நடித்திருக்கும் திரைப்படம் 'ரூபன்'. இப்படத்தினை தயாரிப்பாளர் ஆறுமுகம் கலியப்பன் தயாரிக்க, அரவிந்த் பாபு இசையமைத்துள்ளார். இப்படம் மர்மம் நிறைந்த வரலாற்று கதையாகும். இப்படம் கடந்த 25-ந் தேதி டென்ட்கொட்டா ஓ.டி.டி தளத்தில் வெளியாகி உள்ளது.
'வட்டார வழக்கு'
இயக்குனர் கண்ணுசாமி ராமசந்திரன் இயக்கத்தில் சந்தோஷ், ரவீனா ரவி என பலர் நடித்திருக்கும் திரைப்படம். இப்படத்தினை மதுரா டாக்கீஸ் நிறுவனம் தயாரிக்க, இசையமைப்பாளர் இளையராஜா இசையமைத்துள்ளார். கிராமத்தில் நடக்கும் சம்பவங்களை அடிப்படையாக கொண்டு இப்படம் உருவாகி உள்ளது. இந்த நிலையில் இப்படம், கடந்த 25-ந் தேதி டென்ட்கொட்டா ஓ.டி.டி தளத்தில் வெளியாகி உள்ளது.
'ஆர்.ஆர்.ஆர்: பிஹைண்ட் அண்ட் பியோன்ட்'
ராஜமவுலி இயக்கத்தில் ஜுனியர் என்.டி.ஆர், ராம் சரண், ஆலியா பட், ஸ்ரேயா, சமுத்திரக்கனி உள்பட பலர் நடித்து சூப்பர் ஹிட்டான திரைப்படம் 'ஆர்.ஆர்.ஆர்'. இந்தப் படம் ரூ.1,150 கோடிக்கு மேல் வசூல் ஈட்டியது. இந்நிலையில் இத்திரைப்படம் உருவான விதத்தை படக்குழு ஆவணப்படுத்தியுள்ளனர். இந்த ஆவணப்படம் தற்பொழுது நெட்பிளிக்ஸ் ஓ.டி.டி தளத்தில் வெளியாகி உள்ளது.
'பூல் புலையா 3'
அனீஸ் பாஸ்மி இயக்கத்தில் கார்த்திக் ஆர்யன், திரிப்தி டிம்ரி, வித்யா பாலன் மற்றும் மாதுரி தீட்சித் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ள படம் 'பூல் புலையா 3'. நகைச்சுவை திகில் கதைக்களத்தில் இப்படம் உருவாகி உள்ளது. கடந்த நவம்பர் மாதம் வெளியான இப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த நிலையில் இப்படம் நெட்பிளிக்ஸ் ஓ.டி.டி தளத்தில் வெளியாகி உள்ளது.
'ஒயிட் ரோஸ்'
அறிமுக இயக்குனர் ராஜசேகர் இயக்கத்தில் ஆனந்தி நடித்துள்ள திரில்லர் திரைப்படம் 'ஒயிட் ரோஸ்'. இந்த படத்தை பூம்பாரை முருகன் புரொடக்சன்ஸ் தயாரிக்கிறது. இந்த படத்தில் ஆர்.கே.சுரேஷ், விஜித், ரூசோ ஶ்ரீதரன், சசிலயா, கணேஷ், ராமநாதன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படம் சிம்பிலி சவுத் ஓ.டி.டி தளத்தில் வெளியாகி உள்ளது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.