என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
சினிமா
![நினைவோ ஒரு பறவை படத்தின் போஸ்டர் நினைவோ ஒரு பறவை படத்தின் போஸ்டர்](https://img.maalaimalar.com/Articles/2021/Nov/202111061737378378_Tamil_News_Ninaivo-oru-Paravai-movie-preview_SECVPF.gif)
X
நினைவோ ஒரு பறவை படத்தின் போஸ்டர்
நினைவோ ஒரு பறவை
By
மாலை மலர்6 Nov 2021 5:37 PM IST (Updated: 6 Nov 2021 5:37 PM IST)
![மாலை மலர் மாலை மலர்](/images/authorplaceholder.jpg?type=1&v=2)
ரிதுன் இயக்கத்தில் மைண்ட் டிராமா புரொடக்ஷன்ஸ் மற்றும் ஒயிட்டக் ஸ்டுடியோஸ் இணைந்து தயாரிக்கும் படம் ‘நினைவோ ஒரு பறவை’ படத்தின் முன்னோட்டம்.
மைண்ட் டிராமா புரொடக்ஷன்ஸ் மற்றும் ஒயிட்டக் ஸ்டுடியோஸ் இணைந்து தயாரிக்கும் படம் ‘நினைவோ ஒரு பறவை’. இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வந்த நிலையில், கொரோனா வைரஸ் காரணமாக தடைபட்டு வந்தது. தற்போது நான்காம் கட்ட படப்பிடிப்பு டிசம்பர் முதல் வாரத்தில் காரைக்குடியில் துவங்கவுள்ளது.
படப்பிடிப்பு மீண்டும் தொடங்குவது குறித்து தயாரிப்பு நிறுவனம் கூறுகையில், ‘’எங்களது படத்திலிருந்து மீனா மினிக்கி.... மற்றும் இறகி இறகி...., கனவுல உசுர..... என்ற பாடல்களுக்கு ரசிகர்கள் மிகப்பெரிய வரவேற்பு கொடுத்தார்கள். இந்த கொரோனா பெருந்தொற்று காரணத்தால் நாங்கள் படப்பிடிப்புக்கு செல்லவில்லை. மனிதர்களின் உயிரை விட நாங்கள் படப்பிடிப்பை பெரிதாகக் கருதவில்லை. தற்போது சாதாரண சூழல் நிலவி வருவதால் அடுத்த மாதம் டிசம்பரில் காரைக்குடியில் படப்பிடிப்பை துவங்க உள்ளோம்.
![முன்னோட்டம் முன்னோட்டம்](https://img.maalaimalar.com/InlineImage/202111061737378378_1_preview-1._L_styvpf.jpg)
படக்குழுவினர்
அதேபோல் இந்த கொரோனா பெரும் தொற்றால் எங்கள் படத்தில் பணி புரிந்த சிலரையும் நாங்கள் இழந்து விட்டோம். அது மிகவும் மன வேதனை அளித்தது. மீண்டும் தற்போது புதிய உற்சாகத்தோடு அடுத்தகட்டப் படப்பிடிப்பை டிசம்பர் முதல் காரைக்குடியில் துவக்க உள்ளோம்’’.
நினைவோ ஒரு பறவை படத்தை ரிதுன் இயக்க யூடியூப் புகழ் ஹரி பாஸ்கர் சிறுவயது கதாநாயகனாக நடிக்கிறார். தமன் இசை அமைக்கும் இப்படம் 2022 ஏப்ரல் மாதம் திரைக்கு வர உள்ளது.
Next Story
×
X