என் மலர்
சினிமா
ரிலீஸ் தேதியை அறிவித்த 'லக்கி பாஸ்கர்' படக்குழு
- ஒரு நடுத்தர வர்க்க வங்கியாளரின் வாழ்க்கையில் நடிகர் நடிக்கிறார்.
- டீசர் வெளியாகி ரசிகர்களிடம் கவனம் பெற்றது.
வெங்கி அட்லூரி இயக்கத்தில் துல்கர் சல்மான் நடித்துள்ள படம் 'லக்கி பாஸ்கர்'. 80களின் பின்னணியில் எடுக்கப்பட்ட இப்படம் ஒரு வங்கியாளரின் மர்மமான செல்வங்களை ஆராய்கிறது.
லக்கி பாஸ்கர்' படத்தில் துல்கர் சல்மான் முக்கிய வேடத்தில் நடிக்கிறார் மற்றும் அவருக்கு ஜோடியாக மீனாட்சி சவுத்ரி பெண் நாயகியாக நடிக்கிறார். ஒரு நடுத்தர வர்க்க வங்கியாளரின் வாழ்க்கையில் நடிகர் நடிக்கிறார், ஜிவி பிரகாஷ்குமார் இசையமைத்துள்ளார்.
லக்கி பாஸ்கர் படத்தின் தெலுங்கு டீசர் வெளியாகி ரசிகர்களிடம் கவனம் பெற்றது.
இந்நிலையில், லக்கி பாஸ்கர் திரைப்படம் செப்டம்பர் 7ம் தேதி வெளியாகும் என படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. லக்கி பாஸ்கர் படமானது தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி ஆகிய மொழிகளில் வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ரிலீஸ் தேதி அறிவித்தது ரசிகர் படம் பார்க்க ஆர்வத்தில் உள்ளதாக காமெண்ட்களை தெரிவித்து வருகின்றனர்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.