search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட் (Cricket)

    சதம் விளாசிய வில்லியம்சன்: 2-வது இன்னிங்சில் நியூசிலாந்து 483 ரன்கள் குவிப்பு- இங்கிலாந்துக்கு 258 ரன் இலக்கு
    X

    சதம் விளாசிய வில்லியம்சன்: 2-வது இன்னிங்சில் நியூசிலாந்து 483 ரன்கள் குவிப்பு- இங்கிலாந்துக்கு 258 ரன் இலக்கு

    • நியூசிலாந்து 162.3 ஓவரில் 483 ரன்கள் குவித்து ஆல் அவுட் ஆனது.
    • இங்கிலாந்து தரப்பில் ஜாக் லீச் 5 விக்கெட் கைப்பற்றினார்.

    வெலிங்டன்:

    இங்கிலாந்து-நியூசிலாந்து அணிகள் மோதும் 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் வெலிங்டனில் நடந்து வரு கிறது. முதல் இன்னிங்சில் இங்கிலாந்து 8 விக்கெட்டுக்கு 435 ரன் குவித்து டிக்ளேர் செய்தது.

    பின்னர் விளையாடிய நியூசிலாந்து 209 ரன்னுக்கு ஆல்-அவுட் ஆகி பாலோ-ஆன் ஆனது. இதனால் 226 ரன்கள் பின்தங்கிய நிலையில் தொடர்ந்து 2-வது இன்னிங்சை நியூசிலாந்து விளையாடியது.

    இதில் அந்த அணியின் தொடக்கம் சிறப்பாக இருந்தது. நேற்றைய 3-ம் நாள் ஆட்ட நேர முடிவில் நியூசிலாந்து 3 விக்கெட்டுக்கு 202 ரன்கள் எடுத்து இருந்தது. வில்லியம்சன் 25 ரன்னுடனும், நிகோல்ஸ் 18 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.

    இன்று 4-வது நாள் ஆட்டம் நடந்தது. நிகோல்ஸ் 30 ரன்னில் அவுட் ஆனார். வில்லியம்சன் நிலைத்து நின்று விளையாடினார். மிட்செல் 54 ரன் எடுத்து ஆட்டமிழந்தார். அடுத்து களம் வந்த ப்ளுன்டெல், வில்லியம்சனுக்கு உறு துணையாக விளையாடினார்.

    இருவரின் ஆட்டத்தால் நியூசிலாந்து முன்னிலை பெற்றது. வில்லியம்சன் தனது 26-வது சதத்தை (92 டெஸ்ட்) பூர்த்தி செய்தார். அவர் 132 ரன் எடுத்து (282 பந்து, 12 பவுண்டரி) அவுட் ஆனார். அடுத்து களம் வந்த பிரேஸ்வெல் 8 ரன்னில் ரன் அவுட் ஆனார்.

    நியூசிலாந்து 162.3 ஓவரில் 483 ரன்கள் குவித்து ஆல் அவுட் ஆனது. டாம் ப்ளுன்டெல் 90 ரன் எடுத்து கடைசி விக்கெட்டாக அவுட் ஆனார். இங்கிலாந்து தரப்பில் ஜாக் லீச் 5 விக்கெட் கைப்பற்றினார்.

    இங்கிலாந்து அணிக்கு 258 ரன் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. இதையடுத்து அந்த அணி 2-வது இன்னிங்சை விளையாடியது பாலோ-ஆனுக்கு தள்ளப்பட்ட நியூசிலாந்து அணி அதிலிருந்து மீண்டு இலக்கு நிர்ணயித்துள்ளது.

    Next Story
    ×