என் மலர்
கிரிக்கெட் (Cricket)

பெண் குழந்தைகள் கிடைப்பது வரம்.. தந்தையான சிஎஸ்கே வீரர்.. வைரலாகும் புகைப்படம்

- பெண் குழந்தைகள் கிடைப்பது எல்லாம் வரம் என்று கூறி அந்த பதிவை வெளியிட்டுள்ளார்.
- அவருக்கு சிஎஸ்கே வீரர்கள் வாழ்த்துக்கள் தெரிவித்தனர்.
இந்தியன் பிரீமியர் லீக்கில் சென்னை அணிக்காக விளையாடும் இந்திய கிரிக்கெட் வீரர் அம்பதி ராயுடு. அம்பதி ராயுடு தனது ஐபிஎல் வாழ்க்கையில் இன்றுவரை 200 போட்டிகளில் விளையாடி 28.37 சராசரியுடன் 4312 ரன்கள் எடுத்துள்ளார். மேலும் இவர் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக மீண்டும் விளையாடுவார் என தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் அம்பதி ராயுடுவுக்கு இரண்டாவதாக பெண் குழந்தை பிறந்துள்ளது. இது குறித்து தனது சமூக வலைத்தளங்களில் அவரது இரண்டாவது மகளின் புகைப்படத்தை பதிவிட்டுள்ளார்.
பெண் குழந்தைகள் கிடைப்பது எல்லாம் வரம் என்று கூறி அந்த பதிவை வெளியிட்டுள்ளார். மேலும் அந்த புகைப்படமானது வைரலாகி வருவதோடு, ரசிகர்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
ராயுடுவுக்கு சிஎஸ்கே வீரர்கள் வாழ்த்துக்கள் தெரிவித்தனர். மேலும் தங்கள் ரசிகர்களுடன் மகிழ்ச்சியான செய்தியை பகிர்ந்து கொள்ளவும் சிஎஸ்கே தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளது.
இந்த புகைப்படமானது தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.