என் மலர்tooltip icon

    கிரிக்கெட் (Cricket)

    சிராஜ் வீசிய பவுன்சர் பந்தில் முழங்கையில் காயம்- கடைசி 2 டெஸ்டில் இருந்து விலகிய டேவிட் வார்னர்
    X

    சிராஜ் வீசிய பவுன்சர் பந்தில் முழங்கையில் காயம்- கடைசி 2 டெஸ்டில் இருந்து விலகிய டேவிட் வார்னர்

    • டெல்லி டெஸ்டின் போது வார்னருக்கு முழங்கையில் காயம் ஏற்பட்டது.
    • டெஸ்ட் தொடரின் எஞ்சிய இரண்டு போட்டிகளில் வார்னர் இடம்பெறமாட்டார் என ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் தெரிவித்தது.

    இந்திய அணிக்கு எதிரான பார்டர்-கவாஸ்கர் டிராபி தொடரில் ஆஸ்திரேலிய அணி 4 டெஸ்டில் விளையாடி வருகிறது. ஏற்கனவே நடந்த 2 போட்டிகளில் இந்திய அணி வெற்றிபெற்று அசத்தியது.

    இரு அணிகளுக்கும் இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி இந்தூரில் உள்ள ஹோல்கர் மைதானத்தில் வருகின்ற மார்ச் 1-ம் தேதி தொடங்குகிறது. இந்த போட்டிக்கு முன்னதாக, ஆஸ்திரேலியாவின் நட்சத்திர பேட்ஸ்மேன் டேவிட் வார்னர் தொடரின் எஞ்சிய இரண்டு போட்டிகளில் இருந்து விலகியுள்ளார். டெல்லியில் நடந்த டெஸ்டின்போது முகமது சிராஜ் வீசிய பந்தில் வார்னரின் கையில் காயம் ஏற்பட்டு தற்போது தீவிரமானது. அதற்காக உரிய சிகிச்சை பெற வார்னர் ஆஸ்திரேலியா திரும்ப இருக்கிறார்.

    டெஸ்ட் தொடரை தொடர்ந்து நடைபெறும் ஒருநாள் போட்டிகளுக்கான ஆஸ்திரேலிய அணியில் வார்னர் இணைவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இதுகுறித்து ஆஸ்திரேலியா கிரிக்கெட் வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கையில்:-

    டெல்லி டெஸ்டின் போது வார்னருக்கு முழங்கையில் காயம் ஏற்பட்டது. தொடரின் எஞ்சிய இரண்டு போட்டிகளில் வார்னர் இடம்பெறமாட்டார்.

    என்று தெரிவித்தது.

    வார்னர் விளையாடாத நிலையில், கவாஜாவுடன் தொடக்க ஆட்டக்காரராக யார் களமிறங்குவார்கள் என்பதை ஆஸ்திரேலியா கிரிக்கெட் வாரியம் இன்னும் தெரிவிக்கவில்லை. ஆனால் வருகிற டெஸ்ட் போட்டிகளில் கவாஜாவுடன் தொடக்க வீரராக டிராவிஸ் ஹெட் மட்டுமே களமிறங்க அதிக வாய்ப்புள்ளது.

    டெல்லி டெஸ்டின் இரண்டாவது இன்னிங்ஸில், வார்னர் பேட்டிங் செய்ய முடியாத சூழ்நிலை ஏற்பட்டபோது, ஆஸ்திரேலிய அணி நிர்வாகம் ஹெட்டை தொடக்க ஆட்டக்காரராக களமிறக்கியது.

    Next Story
    ×