என் மலர்
கிரிக்கெட் (Cricket)
மும்பை இறுதிப்போட்டிக்கு வரக்கூடாது என்பதே எனது விருப்பம்- பிராவோ
- குவாலிபையர் 2-ல் குஜராத் அணியும் மும்பை அணியும் நாளை அகமதாபாத்தில் மோதவுள்ளது.
- சென்னை இறுதிப்போட்டிக்கு ஏற்கனவே முன்னேறியுள்ள நிலையில் மும்பை அணியும் இறுதிப் போட்டிக்கு வரவேண்டும் என ரசிகர்கள் விருப்பம் தெரிவித்துள்ளனர்.
ஐபிஎல் தொடர் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. இந்த சீசனின் பிளே சுற்றில் குஜராத், சென்னை, லக்னோ, மும்பை ஆகிய அணிகள் இடம் பெற்றது.
இந்நிலையில் முதல் இரண்டு இடங்களை பிடித்த சென்னை - குஜராத் அணிக்கு குவாலிபையர் சுற்று நடைபெற்றது. இந்த போட்டி சென்னையில் நடைபெற்றது. இதில் முதலில் பேட்டிங் செய்த சென்னை அணி 172 ரன்கள் எடுத்தது. இதனையடுத்து களமிறங்கிய குஜராத் அணி டோனியின் சிறப்பான கேப்டன்ஷிப்பால் 157 ரன்னில் ஆல் அவுட் ஆனது.
இதனால் சென்னை அணி 10-வது முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது. இதனை தொடர்ந்து நேற்று எலிமினேட்டர் சுற்றில் மும்பை - லக்னோ அணிகள் மோதின. இதில் முதலில் பேட்டிங் செய்த மும்பை அணி 182 ரன்கள் எடுத்தது. அதனை தொடர்ந்து ஆடிய லக்னோ அணி 101 ரன்னில் சுருண்டது.
இதன்மூலம் குவாலிபையர் 2-ல் குஜராத் அணியும் மும்பை அணியும் நாளை அகமதாபாத்தில் மோதவுள்ளது.
சென்னை இறுதிப்போட்டிக்கு ஏற்கனவே முன்னேறியுள்ள நிலையில் மும்பை அணியும் இறுதிப் போட்டிக்கு வரவேண்டும் என ரசிகர்கள் விருப்பம் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் இறுதிப்போட்டிக்கு மும்பை அணி வரக்கூடாது என்பது தனது தனிப்பட்ட விருப்பம் என சென்னை அணியின் பந்து வீச்சு பயிற்சியாளர் பிராவோ சிரித்தபடி கூறியுள்ளார்.
இதனை கிரிக்கெட் ரசிகர்கள் பயந்துட்டியா குமாரு என்று சமூக வலைதளங்களில் மீம்ஸ் போட்டு வருகின்றனர்.
ஐபிஎல் கோப்பையை மும்பை இந்தியன்ஸ் அணி ஐந்து முறையும் சென்னை அணி நான்கு முறையும் கைப்பற்றியுள்ளது.