search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட் (Cricket)

    ரெய்னா இல்லாமல் முதல் முறை: கெய்க்வாட்டுக்கு இதுதான் முதல் முறை- சேப்பாக்கத்தில் சிஎஸ்கே
    X

    ரெய்னா இல்லாமல் முதல் முறை: கெய்க்வாட்டுக்கு இதுதான் முதல் முறை- சேப்பாக்கத்தில் சிஎஸ்கே

    • சேப்பாக்கம் மைதானத்தில் ரெய்னா அணியில் இல்லாமல் ஐபிஎல் தொடரில் முதல் முறையாக சிஎஸ்கே இன்று விளையாட உள்ளது.
    • சிஎஸ்கே அணியின் இளம் வீரர் ருதுராஜ் கெய்க்வாட்டுக்கு சேப்பாக்கத்தில் இதுவே முதல் போட்டி.

    சென்னை:

    16-வது ஐ.பி.எல். கிரிக்கெட் திருவிழா அகமதாபாத்தில் கடந்த 31- ந் தேதி தொடங்கியது.

    இதில் பங்கேற்றுள்ள 10 அணிகளும் 2 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. 'ஏ' பிரிவில் மும்பை இந்தியன்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், டெல்லி கேப்பிட்டல்ஸ், லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் ஆகிய அணிகளும், 'பி' பிரிவில் சென்னை சூப்பர் கிங்ஸ், சன்ரைசர்ஸ் ஐதராபாத், குஜராத் டைட்டன்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர், பஞ்சாப் கிங்ஸ் ஆகிய அணிகளும் இடம் பெற்றுள்ளன.

    இந்நிலையில் சேப்பாக்கம் எம்.ஏ. சிதம்பரம் ஸ்டேடியத்தில் இன்று இரவு 7.30 மணிக்கு நடைபெறும் ஆட்டத்தில் டோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ்-லோகேஷ் ராகுல் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிகள் மோதுகின்றன.

    சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இந்த சீசனில் தோல்வியுடன் தொடங்கியது. முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் குஜராத் டைட்டன்சிடம் 5 விக்கெட் வித்தியாசத்தில் தோற்றது. 2-வது ஆட்டத்தில் இன்று லக்னோ சூப்பர் ஜெயன்ட்சை சந்திக்கிறது.

    அந்த அணியை வீழ்த்தி சி.எஸ்.கே. வெற்றி பெறுமா? என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கிறார்கள். சேப்பாக்கத்தில் விளையாடுவது சென்னை அணிக்கு சாதகமானது. உள்ளூர் ரசிகர்களின் ஆதரவு சி.எஸ்.கே.வுக்கு கூடுதல் பலமாக இருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

    அதே நேரத்தில் லக்னோ அணி பேட்டிங் மற்றும் பந்து வீச்சில் சமநிலையில் இருக்கிறது. இதனால் சி.எஸ்.கே. வீரர்கள் வெற்றிக்காக கடுமையாக போராட வேண்டும்.

    சென்னை அணியின் தொடக்க வீரர் ருதுராஜ் கெய்க்வாட் நல்ல நிலையில் உள்ளார். குஜராத்துக்கு எதிராக அவர் 50 பந்தில் 92 ரன் எடுத்தார். இந்த ஆட்டத்தில் அவர் 9 சிக்சர்கள் அடித்தார். 2021- ம் ஆண்டு சென்னை அணி ஐ.பி.எல். கோப்பையை வெல்ல ருதுராஜ் முக்கிய பங்கு வகித்தார். அவர் சேப்பாக்கம் மைதானத்தில் முதல் முறையாக விளையாடுகிறார். அதிரடியான ஆட்டத்தை அவர் வெளிப்படுத்தி ரசிகர்களுக்கு விருந்து படைப்பாரா? என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    பென் ஸ்டோக்ஸ், மொய்ன் அலி, கான்வே, ஜடேஜா, கேப்டன் டோனி, தீபக் சாஹர் போன்ற சிறந்த வீரர்களும் இருக்கி றார்கள. பந்து வீச்சு பலவீன மாகவே காணப்படுகிறது. அதை நிவர்த்தி செய்வது அவசிய மாகிறது. சேப்பாக்கம் மைதானம் சுழற்பந்து வீச்சுக்கு ஏற்றது. இதனால் மொய்ன் அலிக்கு இன்றைய ஆட்டத்தில் வாய்ப்பு வழங்கப்படும். குஜராத்துக்கு எதிரான ஆட்டத்தில் அவர் பந்து வீசவில்லை. சேப்பாக்கம் மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் 56 ஆட்டத்தில் விளையாடி 40-ல் வெற்றி பெற்றது. இதனால் இங்கு இருந்து சி.எஸ்.கே. வெற்றி கணக்கை தொடங்கும் ஆர்வத்தில் உள்ளது.

    சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் சுரேஷ் ரெய்னா அணியில் இல்லாமல் ஐபிஎல் தொடரில் முதல் முறையாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இன்று விளையாட உள்ளது. அதேபோல சிஎஸ்கே அணியின் இளம் வீரர் ருதுராஜ் கெய்க்வாட்டுக்கு சேப்பாக்கத்தில் இதுவே முதல் போட்டி.

    கடந்த 2008 முதல் சேப்பாக்கம் மைதானத்தில் 56 போட்டிகளில் சென்னை சூப்பர் கிங்ஸ் விளையாடி உள்ளது. அந்த 56 போட்டிகளிலும் ரெய்னா விளையாடி உள்ளார்.

    4 ஆண்டுகளுக்கு பிறகு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சேப்பாக்கம் மைதானத்தில் விளையாடுவதால் ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் இந்தப் போட்டியை எதிர்நோக்கி உள்ளனர்.

    Next Story
    ×