search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட் (Cricket)

    ருதுராஜ் அதிரடி வீண் - சென்னையை வீழ்த்தி முதல் வெற்றியைப் பதிவு செய்தது குஜராத் டைட்டன்ஸ்
    X

    ஷுப்மன் கில்

    ருதுராஜ் அதிரடி வீண் - சென்னையை வீழ்த்தி முதல் வெற்றியைப் பதிவு செய்தது குஜராத் டைட்டன்ஸ்

    • முதலில் ஆடிய சென்னை அணி 20 ஓவரில் 178 ரன்கள் குவித்தது.
    • ருதுராஜ் கெயிக்வாட் 4 பவுண்டரி, 9 சிக்சர் உள்பட 92 ரன்கள் எடுத்தார்.

    அகமதாபாத்:

    ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரின் 16-வது சீசன் இன்று தொடங்கியது. தொடக்க ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் குஜராத் டைட்டன்சும், முன்னாள் சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளும் மோதின. டாஸ் வென்ற குஜராத் அணி கேப்டன் ஹர்திக் பாண்ட்யா பந்துவீச்சை தேர்வு செய்தார்.

    அதன்படி, முதலில் பேட்டிங் செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுக்கு 178 ரன்கள் குவித்தது.

    தொடக்க ஆட்டக்காரர் ருதுராஜ் கெய்க்வாட் அதிரடியாக ஆடி 50 பந்தில் 4 பவுண்டரி, 9 சிக்சர்களுடன் 92 ரன்கள் குவித்தார். மொயீன் அலி 23 ரன்னும், ஷிவம் துபே 19 ரன்னும், டோனி 7 பந்துகளில் 14 ரன்னும் எடுத்தனர்.

    குஜராத் சார்பில் முகமது ஷமி, ரஷித் கான், அல்ஜாரி ஜோசப் தலா 2 விக்கெட் கைப்பற்றினர். ஜோஸ் லிட்டில் ஒரு விக்கெட் எடுத்தார்.

    இதையடுத்து, 179 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் குஜராத் டைட்டன்ஸ் களமிறங்கியது. விரித்திமான் சகா 25 ரன்னும், சாய் சுதர்சன் 22 ரன்னும், கேப்டன் ஹர்திக் பாண்ட்யா 8 ரன்னும் எடுத்து அவுட்டாகினர்.

    ஒருபுறம் விக்கெட்டுகள் வீழ்ந்தாலும் தொடக்க ஆட்டக்காரர் ஷுப்மன் கில் சிக்சர், பவுண்டரிகளை விளாசினார். அவர் 36 பந்தில் 63 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.

    கடைசி 4 ஓவரில் வெற்றிக்கு 34 ரன்கள் தேவைப்பட்டது. 17வது ஓவரில் 4 ரன்னும், 18வது ஓவரில் 7 ரன்னும் எடுத்தனர். விஜய் சங்கர் 27 ரன்னில் ஆட்டமிழந்தார். 19வது ஓவரில் ரஷீத் கான் சிக்சர் உள்பட 15 ரன்கள் கிடைத்தது.

    இறுதியில், குஜராத் அணி 5 விக்கெட் இழப்புக்கு 182 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. இதன்மூலம் நடப்பு ஐபிஎல் தொடரில் குஜராத் அணி முதல் வெற்றியைப் பதிவு செய்துள்ளது.

    சென்னை அணி சார்பில் ஹங்கர்சேகர் 3 விக்கெட் வீழ்த்தினார். ரவீந்திர் ஜடேஜா, தேஷ்பாண்டே தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.

    Next Story
    ×