என் மலர்
கிரிக்கெட் (Cricket)

என் தந்தைக்கு வெற்றியை அர்ப்பணிக்கிறேன்.. மொஹ்சின் கான் நெகிழ்ச்சி

- என் அப்பா நேற்று முன்தினம் தான் ஐசியூ-வில் இருந்து டிஸ்சார்ஜ் ஆனார்.
- கடந்த போட்டியில் எனது செயல்பாடு சிறப்பாக இல்லை.
லக்னோ:
ஐபிஎல் தொடரின் 63-வது லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிகள் விளையாடின. முதலில் விளையாடிய லக்னோ அணி 177 ரன்கள் எடுத்தது. இதனையடுத்து களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணி 172 மட்டுமே எடுத்தது. இதனால் லக்னே அணி 5 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றாது.
மும்பை அணியின் வெற்றிக்கு கடைசி ஓவரில் 11 ரன்கள் மட்டுமே தேவைப்பட்டது. அந்த ஓவரை லக்னோ அணிக்காக வீசிய மொஹ்சின் கான், வெறும் 5 ரன்கள் மட்டுமே கொடுத்து அணியை வெற்றி பெற செய்தார். அதுவும் டிம் டேவிட் மற்றும் கேமரூன் கிரீன் என இருவரும் ஸ்ட்ரைக்கில் இருந்த போது இதை அவர் செய்திருந்தார்.
இந்நிலையில் வெற்றி முக்கிய பங்கு வகித்த மொஹ்சின் கான் கூறியதாவது:-
இந்த ஓராண்டு காலம் ரொம்பவே கடினமானது. காயத்தில் இருந்து மீண்டு விளையாட வந்துள்ளேன். என் அப்பா நேற்று முன்தினம் தான் ஐசியூ-வில் இருந்து டிஸ்சார்ஜ் ஆனார். 10 நாட்கள் அவர் மருத்துவ சிகிச்சையில் இருந்தார். என் தந்தைக்கு வெற்றியை அர்ப்பணிக்கிறேன். அவர் இந்த ஆட்டத்தை பார்த்திருப்பார்.
கடந்த போட்டியில் எனது செயல்பாடு சிறப்பாக இல்லை. இருந்தும் இந்த முக்கியமான போட்டியில் விளையாட எனக்கு வாய்ப்பு கொடுத்த அணி நிர்வாகம், கம்பீர் சார் மற்றும் விஜய் தஹியா சாருக்கு நன்றியுள்ளவனாக இருப்பேன். நான் பயிற்சியின் போது செய்ததை ஆட்டத்திலும் செய்ய வேண்டும் என்பது தான் திட்டம்.
ரன் அப்பில் எந்த மாற்றமும் செய்யாமல் அமைதியாக பந்து வீச முடிவு செய்தேன். கடைசி ஓவரின் போது ஸ்கோர் போர்டை பார்க்கவில்லை. அந்த ஓவரில் நான் பந்தை மெதுவாக வீசினேன். இரண்டு பந்துகளுக்கு பிறகு யார்க்கர் வீசினேன்.
என மொஹ்சின் கான் தெரிவித்துள்ளார்.