search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட் (Cricket)

    டெஸ்ட் தரவரிசை: அஸ்வின் தொடர்ந்து முதலிடம்- பேட்டிங்கில் ஆதிக்கம் செலுத்தும் ஆஸ்திரேலியா வீரர்கள்
    X

    டெஸ்ட் தரவரிசை: அஸ்வின் தொடர்ந்து முதலிடம்- பேட்டிங்கில் ஆதிக்கம் செலுத்தும் ஆஸ்திரேலியா வீரர்கள்

    • பந்து வீச்சாளர்களில் அஸ்வின் தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கிறார்.
    • பேட்ஸ்மேன்களில் மாரன்ஸ் லபுசேன் 903 புள்ளிகளுடன் தொடர்ந்து முதல் இடத்தில் உள்ளார்.

    துபாய்:

    ஐசிசி இன்று வெளியிட்டுள்ள சிறந்த பேட்ஸ்மேன்கள் தரவரிசை பட்டியலில் ஆஸ்திரேலிய வீரர் டிராவிஸ் 884 புள்ளிகளுடன் ஹெட் 3-வது இடத்துக்கு முன்னேறியுள்ளார்.

    சமீபத்தில் நடந்த இந்தியாவுக்கு எதிரான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வென்றது . இந்த போட்டியில் டிராவிஸ் ஹெட் முதல் இன்னிங்சில் சதம் (163) அடித்தும், 2வது இன்னிங்சில் 18 ரன்களும் எடுத்தார். முதல் இன்னிங்சில் அபாரமாக விளையாடிய அவர் 3-வது இடத்துக்கு முன்னேறியுள்ளார்.

    இந்த போட்டியில் முதல் இன்னிங்சில் சதம் அடித்த ஸ்மித் 885 புள்ளிகளுடன் தரவரிசை பட்டியலில் 2-வது இடத்தில் நீடிக்கிறார் ஆஸ்திரேலிய வீரர் மாரன்ஸ் லபுசேன் 903 புள்ளிகளுடன் தொடர்ந்து முதல் இடத்தில் உள்ளார்.

    மேலும் 39 ஆண்டுகளுக்கு பிறகு ஒரே அணியைச் சேர்ந்த மூன்று பேட்ஸ்மேன்கள் முதல் மூன்று இடங்களைப் பிடித்து சாதனை படைத்துள்ளனர். ஒரே அணியை சேர்த்த வீரர்கள் முதல் மூன்று இடங்களைப் பிடிப்பது அரிதான நிகழ்வு. டெஸ்ட் பேட்டிங் தரவரிசையில் இது கடைசியாக 1984-ல் நிகழ்ந்தது. மேற்கிந்திய தீவுகள் வீரர்கள் கோர்டன் கிரீனிட்ஜ் (810 ரேட்டிங் புள்ளிகள்), கிளைவ் லாயிட் (787) மற்றும் லாரி கோம்ஸ் (773) ஆகியோர் பட்டியலில் முதலிடத்தில் இருந்தனர்.

    இந்தியா சார்பில் ரிஷப் பண்ட் 10-வது இடத்தில் உள்ளார். ரகானே முதல் இன்னிங்சில் 89 மற்றும் 2-வது இன்னிங்சில் 46 ரன்கள் எடுத்ததன் மூலம் அவர் 37-வது இடத்திற்குத் திரும்பினார். ஷர்துல் தாக்கூர் முதல் இன்னிங்சில் அரைசதம் அடித்ததன் மூலம் 6 இடங்கள் முன்னேறி 94-வது இடத்தைப் பிடித்துள்ளார்.

    பந்து வீச்சாளர்களில் அஸ்வின் தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கிறார்.

    Next Story
    ×