என் மலர்
கிரிக்கெட் (Cricket)

கோப்புப்படம்
தென்ஆப்பிரிக்கா தொடரில் விராட் கோலி விளையாடுவது சந்தேகம்
- தற்போது நடைபெற்று வரும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 தொடரில் ஓய்வு.
- தென்ஆப்பிரிக்காவுக்கு எதிராக ஒயிட்-பால் கிரிக்கெட் தொடரில் ஓய்வு கேட்டுள்ளார்.
உலகக் கோப்பை கிரிக்கெட் தொடருக்குப்பின் இந்திய அணி தற்போது ஆஸ்திரேலியாவுக்கு எதிராக ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது.
இந்த தொடர் முடிவடைந்தவுடன் தென்ஆப்பிரிக்கா சுற்றுப் பயணம் செய்து தலா மூன்று ஒருநாள், டி20 மற்றும் இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர்களில் விளையாட இருக்கிறது.
இந்தத் தொடர் டிசம்பர் 10-ந்தேதி முதல் அடுத்த ஆண்டு ஜனவரி 7-ந்தேதி வரை நடைபெற இருக்கிறது. இந்த தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட இருக்கும் நிலையில், ஒயிட்-பால் தொடரில் ஓய்வு எடுத்துக் கொள்ள விரும்புவதாக பிசிசிஐ-க்கு விராட் கோலி தெரிவித்துள்ளார். இதனால் விராட் கோலி ஒருநாள் மற்றும் டி20 தொடரில் விளையாடுவது சந்தேகம் எனக் கூறப்படுகிறது.
உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் சிறப்பாக விளையாடிய விராட் கோலி, 3 சதங்கள் விளாசியதுடன் தொடர் நாயகன் விருதைப் பெற்றார். இருந்தபோதிலும் கோப்பையை வெல்ல முடியாததால் மிகுந்த கவலை அடைந்தார்.
விராட் கோலி, ரோகித் சர்மா உள்ளிட்ட சீனியர் வீரர்களுக்கு ஆஸ்திரேலியா தொடரின்போது ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே, காயம் காரணமாக ஹர்திக் பாண்ட்யா தென்ஆப்பிரிக்கா தொடரில் இருந்து விலகியுள்ளார்.