search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட் (Cricket)

    பிளேஆப் சுற்றில் நுழைய 3 இடத்துக்கு 7 அணிகள் போட்டி- ஐதராபாத், டெல்லி வெளியேற்றம்
    X

    பிளேஆப் சுற்றில் நுழைய 3 இடத்துக்கு 7 அணிகள் போட்டி- ஐதராபாத், டெல்லி வெளியேற்றம்

    • குஜராத் டைட்டன்ஸ் 18 புள்ளிகள் பெற்று முதல் அணியாக நேற்று பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றது.
    • சன்ரைசர்ஸ் ஐதராபாத், டெல்லி கேப்பிட்டல்ஸ் ஆகிய 2 அணிகளும் வாய்ப்பை இழந்து வெளியேறின.

    சென்னை:

    16-வது ஐ.பி.எல். கிரிக்கெட் திருவிழா மார்ச் 31-ந் தேதி அகமதாபாத்தில் தொடங்கியது.

    இதில் 10 அணிகள் பங்கேற்று விளையாடி வருகின்றன. ஒவ்வொரு அணியும் 14 போட்டிகளில் ஆட வேண்டும். லீக் முடிவில் புள்ளிகள் அடிப்ப டையில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெறும்.

    மொத்தம் உள்ள 70 லீக் ஆட்டங்களில் நேற்றுடன் 62 போட்டிகள் முடிந்து விட்டன. இன்னும் 8 ஆட்டங்கள் எஞ்சியுள்ளன.

    நடப்பு சாம்பியனான குஜராத் டைட்டன்ஸ் 18 புள்ளிகள் பெற்று முதல் அணியாக நேற்று பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றது. அந்த அணி முதல் 2 இடங்களை பிடிப்பது உறுதி செய்யப்பட்டது.

    சன்ரைசர்ஸ் ஐதராபாத், டெல்லி கேப்பிட்டல்ஸ் ஆகிய 2 அணிகளும் வாய்ப்பை இழந்து வெளியேறின. பிளே ஆப் சுற்றின் 3 இடத்துக்கு 7 அணிகள் போட்டியில் உள்ளன. அதன் விவரம் வருமாறு:-

    சென்னை சூப்பர் கிங்ஸ்

    டோனி தலைமையிலான சி.எஸ்.கே. அணி 15 புள்ளியுடன் 2-வது இடத்தில் இருக்கிறது. அந்த அணி கடைசி ஆட்டத்தில் டெல்லியை 20-ந் தேதி சந்திக்கிறது. இதில் வெற்றி பெற்றால் சென்னை 17 புள்ளியுடன் தகுதி பெறும்.

    சி.எஸ்.கே. தோற்றால் மற்ற அணிகளின் ஆட்டத்தின் முடிவை பொறுத்தே பிளே ஆப் சுற்று வாய்ப்பு தெரியவரும். ஆனாலும் முதல் 4 இடங்களுக்குள் வருவது கிட்டத்தட்ட உறுதியாகி விட்டது. டெல்லியை வீழ்த்தி "குவாலிபயர் 1" போட்டியில் ஆடுவதை சி.எஸ்.கே. இலக்காக கொண்டுள்ளது.

    14 புள்ளிகளுடன் தற்போது 3-வது இடத்தில் உள்ளது. அந்த அணிக்கு 2 ஆட்டம் இருக்கிறது. லக்னோவுடன் இன்றும் , ஐதராபாத்துடன் 21-ந் தேதியும் மோதுகிறது. இரண்டிலும் வெற்றி பெற்றால் முதல் 2 இடங்களை பிடிக்கும்.

    ஒன்றில் வென்று மற்றொன்றில் தோற்றாலும் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பை பெற்று விடும். இரண்டிலும் தோற்றால் மற்ற அணிகளின் முடிவை பொறுத்தே அமையும். நிகர ரன்ரேட் முக்கிய பங்கு வகிக்கும்.

    6 வெற்றி, 5 தோல்வி, ஒரு முடிவு இல்லை ஆகியவற்றுடன் 13 புள்ளிகளை லக்னோ பெற்று 4-வது இடத்தில் இருக்கிறது. இன்று நடைபெறும் ஆட்டத்தில் மும்பையை சந்திக்கிறது.

    கடைசி ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்சை எதிர் கொள்கிறது. இந்த இரண்டு ஆட்டத்திலும் வெற்றி பெற்றால் அந்த அணி 17 புள்ளியுடன் தகுதி பெறும். ஒரு வெற்றி, ஒரு தோல்வி அடைந்தால் மற்ற அணிகளின் முடிவை பொறுத்து இருக்கிறது. இரண்டிலும் தோற்றால் அந்த அணி வெளியேற்றப்படும் நிலை ஏற்படும்.

    பெங்களூர் அணி 12 புள்ளியுடன் இருக்கிறது. 2 ஆட்டம் எஞ்சியுள்ளது. 18-ந் தேதி ஐதராபாத்துடனும், 21-ந் தேதி குஜராத்துடனும் மோதுகிறது. இந்த இரண்டிலும் வெற்றி பெற்றால் அந்த அணி 16 புள்ளிகளை பெறும். அந்த அணியின் நிகர ரன் ரேட்டும் நன்றாக இருக்கிறது. அந்த அணி மோதும் ஆட்டம் கடைசியாக வருவதால் அதற்கு ஏற்ற வகையில் விளையாடலாம்.

    12 புள்ளியுடன் இருக்கும் பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு இன்னும் 2 போட்டிகள் உள்ளது. டெல்லி அணியுடன் நாளையும், ராஜஸ்தானுடன் 19-ந் தேதியும் மோதுகிறது. இந்த இரண்டிலும் வென்றால் பஞ்சாப் 16 புள்ளிகளை பெறும். அந்த அணி தனது நிகர ரன் ரேட்டை உயர்த்தினால் அடுத்த சுற்றுக்கு தகுதி பெறலாம்.

    தொடக்கத்தில் முன்னேறிய நிலையில் இருந்த ராஜஸ்தான் தற்போது பரிதாப நிலையில் உள்ளது. 12 புள்ளியுடன் இருக்கும் அந்த அணி கடைசி லீக் ஆட்டத்தில் பஞ்சாப்புடன் மோதுகிறது. இதில் வெற்றி பெற்றாலும் அந்த அணி பிளேஆப் சுற்றுக்கு நுழைவது மிகவும் கடினமானதே. மும்பை, லக்னோ அணிகள் இரண்டிலும் தோற்க வேண்டும்.

    ராஜஸ்தானை போன்ற நிலைதான் கொல்கத்தா நைட் ரைடர்சுக்கு இருக்கிறது. அந்த அணி கடைசி ஆட்டத்தில் லக்னோவை சந்திக்கிறது. கொல்கத்தா அணியும் பிளே ஆப் சுற்றில் நுழைவதற்கான வாய்ப்பு மிக மிக குறைவே.

    Next Story
    ×