என் மலர்
கிரிக்கெட் (Cricket)
தெறிக்கவிட்ட டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள்... 203 ரன்கள் குவித்தது ராஜஸ்தான் ராயல்ஸ்
- யாஷாஸ்வி ஜெய்ஸ்வால், ஜாஸ் பட்லர் இருவரும் வலுவான அடித்தளம் அமைத்தனர்.
- சன்ரைசர்ஸ் தரப்பில் ஃபசல்ஹக் பாரூக்கி, நடராஜன் தலா 2 விக்கெட் கைப்பற்றினர்.
ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று ஐதராபாத்தில் நடைபெறும் லீக் ஆட்டத்தில் உள்ளூர் அணியான சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி, ராஜஸ்தான் ராயல்சை எதிர்கொள்கிறது. டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் அணி, பீல்டிங்கைத் தேர்வு செய்தது.
முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணி துவக்கம் முதலே அதிரடியில் மிரட்டியது. அபாரமாக ஆடிய துவக்க வீரர்கள் யாஷாஸ்வி ஜெய்ஸ்வால், ஜாஸ் பட்லர் இருவரும் தலா 54 ரன்கள் குவித்து வலுவான அடித்தளம் அமைத்தனர். அதே விறுவிறுப்பை தொடர்ந்த கேப்டன் சஞ்சு சாம்சன் அணியின் ஸ்கோரை மேலும் உயர்த்தினார்.
ஜாஸ் பட்லர்
தேவ்தத் படிக்கல் 2 ரன்களிலும், ரியான் பராக் 7 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். எனினும் மறுமுனையில் சன்ரைசர்ஸ் அணியின் பந்துவீச்சை சிதறடித்த சஞ்சு சாம்சன் 55 ரன்கள் குவித்தார். அதன்பின் ஹெட்மயருடன் அஷ்வின் இணைய, 20 ஓவர் முடிவில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி, 5 விக்கெட் இழப்பிற்கு 203 ரன்கள் குவித்தது. ஹெட்மயர் 22 ரன்களுடனும், அஷ்வின் ஒரு ரன்னுடனும் களத்தில் இருந்தனர். சன்ரைசர்ஸ் தரப்பில் ஃபசல்ஹக் பாரூக்கி, நடராஜன் தலா 2 விக்கெட் கைப்பற்றினர்.
இதையடுத்து 204 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி களமிறங்குகிறது.