என் மலர்
கிரிக்கெட் (Cricket)

ஐபிஎல் தொடரில் அதிக விலைக்கு ஏலம் போன பேட் கம்மின்ஸ்: ரூ.20.50 கோடிக்கு ஏலம் எடுத்தது சன்ரைசர்ஸ்
- ஆஸ்திரேலியாவின் பேட் கம்மின்சை 20.50 கோடி ரூபாய்க்கு ஏலம் எடுத்தது சன்ரைசர்ஸ் ஐதராபாத்.
- ஏற்கனவே, ஆஸ்திரேலியாவின் டிராவிஸ் ஹெட் சன்ரைசர்ஸ் ஐதராபாத் 6.8 கோடி ரூபாய்க்கு ஏலம் எடுத்துள்ளது.
துபாய்:
17-வது ஐ.பி.எல். போட்டிக்கான வீரர்கள் மினி ஏலம் துபாயில் இன்று நடந்து வருகிறது. ஏலப்பட்டியலில் மொத்தம் 333 வீரர்கள் இடம்பெற்றுள்ளனர். இதில் 214 பேர் இந்தியர்கள், 119 வீரர்கள் வெளிநாட்டை சேர்ந்தவர்கள்.
ஆஸ்திரேலியாவின் பாட் கம்மின்ஸ், டிராவிஸ் ஹெட் ஆகியோர் அதிக விலைக்கு ஏலம் போவார்கள் என முன்னணி வீரர்கள் கருத்து தெரிவித்தனர்.
இந்நிலையில், ஆஸ்திரேலியாவின் பேட் கம்மின்ஸ் இத்தொடரில் மிகவும் அதிக விலைக்கு ஏலம் போனார். அவரை 20.50 கோடி ரூபாய்க்கு சன் ரைசர்ஸ் ஐதராபாத் ஏலம் எடுத்துள்ளது.
ஏற்கனவே, ஆஸ்திரேலியாவின் டிராவிஸ் ஹெட்டை சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி 6.8 கோடி ரூபாய்க்கு ஏலம் எடுத்துள்ளது.
இங்கிலாந்தின் சாம் கர்ரன் 18.50 கோடி ரூபாய்க்கு கடந்த தொடரில் ஏலம் போனார் என்பதே மிகவும் அதிகமாகும்.
Next Story