என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
கிரிக்கெட் (Cricket)
நான் சி.எஸ்.கே. அணியில் இருந்தபோது டோனி எனக்கு நிறைய அறிவுரைகளை வழங்கினார்: ஜெகதீசன்
- கேகேஆர் அணிக்காக விளையாட ஆவலுடன் காத்திருக்கிறேன்.
- 20 லட்சம் என்கிற அடிப்படை விலையில் கலந்துகொண்ட ஜெகதீசனை கொல்கத்தா அணி 90 லட்சத்துக்கு ஏலத்தில் எடுத்தது.
இந்தியாவில் அடுத்த ஆண்டு நடைபெறயிருக்கும் 16-ஆவது ஐ.பி.எல் தொடருக்கான வீரர்களின் மினி ஏலமானது கடந்த டிசம்பர் 23-ஆம் தேதி கொச்சியில் நடைபெற்று முடிந்தது. இந்த ஏலத்தில் பல வெளிநாட்டு வீரர்கள் கோடி கணக்கில் ஏலத்தில் சென்றனர். அதேவேளையில் இந்திய வீரர்களுக்கும் இந்த ஏலத்தில் நல்ல வரவேற்பு இருந்தது. 400-க்கும் மேற்பட்ட வீரர்களில் இருந்து 80-க்கும் மேற்பட்ட வீரர்கள் மட்டுமே இந்த ஏலத்தில் தேர்வு செய்யப்பட்டனர்.
அந்தவகையில் இந்தியாவில் தற்போது ரஞ்சி தொடரானது நடைபெற்று வரும் இவ்வேளையில் உள்ளூர் அணிகளை சேர்ந்த வீரர்களை ஏலத்தில் எடுக்கவும் அனைத்து அணிகளும் ஆர்வம் காட்டின. அந்தவகையில் அண்மையில் நடைபெற்று முடிந்த விஜய் ஹசாரே தொடரில் 5 சதங்களை விளாசிய தமிழக வீரர் ஜெகதீசன் எந்த அணிக்காக தேர்வு செய்யப்படுவார் என்கிற எதிர்பார்ப்பு அனைவரது மத்தியிலும் இருந்தது. இந்நிலையில் இந்த ஏலத்தில் 20 லட்சம் என்கிற அடிப்படை விலையில் கலந்துகொண்ட ஜெகதீசனை கொல்கத்தா அணி 90 லட்சத்துக்கு ஏலத்தில் எடுத்தது.
எதிர்வரும் சீசனில் விளையாடயிருப்பது குறித்து பேசிய தமிழக வீரர் நாராயணன் ஜெகதீசன் கூறுகையில்:-
ஒவ்வொரு வீரருக்கும் ஐ.பி.எல் தொடரில் சிறப்பாக செயல்பட வேண்டும் என்கிற எண்ணம் இருக்கும். அந்தவகையில் நானும் அடுத்த ஆண்டு கொல்கத்தா அணிக்காக ஒரு விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக நிறைய போட்டிகளில் விளையாடுவேன் என்ற நம்பிக்கை இருக்கிறது.
சென்னை அணியில் நான் இருந்த வரை டோனியிடம் இருந்து நிறைய விசயங்களை கற்றுக்கொண்டிருக்கிறேன். நிச்சயம் அவற்றை எதிர்வரும் ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரில் வெளிப்படுத்தி உங்கள் அனைவரையும் மகிழ்விப்பேன் என்று தெரிவித்துள்ளார்.