என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
கிரிக்கெட் (Cricket)
டெஸ்ட் சாம்பியன்ஷிப்: இந்தியா - ஆஸ்திரேலியா இணைந்த நாசர் உசேனின் லெவன்.. ஜடேஜாவுக்கு இடமில்லை
- இந்தியா- ஆஸ்திரேலியா அணியை இணைத்து இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரரான நாசர் உசேன் 11 கொண்ட அணியை தேர்வு செய்துள்ளார்.
- இறுதிப்போட்டி லண்டன் ஓவல் மைதானத்தில் வருகிற 7-ந் தேதி முதல் 11-ந் தேதி வரை நடைபெறுகிறது.
சென்னை:
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டி சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலால் (ஐ.சி.சி.) 2019-ல் அறிமுகம் செய்யப்பட்டது. 2021-ம் ஆண்டு ஜூன் மாதம் நடந்த இறுதிப் போட்டியில் நியூசிலாந்து 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தி சாம்பியன் பட்டம் பெற்றது.
2-வது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டி கடந்த 2021-ம் ஆண்டு ஆகஸ்ட் 4-ந் தேதி தொடங்கியது. இதன் இறுதிப்போட்டி லண்டன் ஓவல் மைதானத்தில் வருகிற 7-ந் தேதி முதல் 11-ந் தேதி வரை நடைபெறுகிறது. இதில் இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் மோதுகின்றன.
இந்நிலையில் இந்தியா- ஆஸ்திரேலியா அணியை இணைத்து இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரரான நாசர் உசேன் 11 கொண்ட அணியை தேர்வு செய்துள்ளார்.
அதில் இந்திய அணி வீரர்கள் 4 பேர் மட்டுமே இடம் பெற்றுள்ளனர். கேப்டனாக ரோகித் சர்மா இடம் பெற்றுள்ளார். அதை தவிர விராட் கோலி, அஸ்வின், முகமது சமி ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.
அந்த அணியில் இடம் பிடித்துள்ள வீரர்கள் விவரம்:-
ரோகித் சர்மா (கேப்டன்), உஸ்மான் கவாஜா, மார்னஸ் லாபஸ்சேன், ஸ்டீவ் ஸ்மித், விராட் கோலி, கேமரூன் கிரீன், அலேக்ஸ் கேரி, அஸ்வின், பேட் கம்மின்ஸ், மிட்செல் ஸ்டார்க், முகமது ஷமி.
இது குறித்து நாசர் உசேன் கூறியதாவது:-
பேட் கம்மின்ஸ் எளிதான தேர்வாக இருந்தது. ஸ்டார்க் இடதுகை வேகப்பந்து வீச்சாளராக இருப்பதாலும், ஒவ்வோரு பந்தையும் மாறுபட்டு (variation) வீசுவதாலும் அவரை 10-வது வீரராக தேர்வு செய்தேன்.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி துணைக் கண்டத்திலோ அல்லது இந்தியாவிலோ நடந்தால், நான் ஜடேஜாவை தேர்வு செய்திருப்பேன். ஆனால் இந்த போட்டி இங்கிலாந்தில் நடப்பதால் அவரை தேர்வு செய்யவில்லை.
ஆல்-ரவுண்டராக சுழற்பந்து வீச்சாளர் அஸ்வினை தேர்வு செய்வேன். அவர் 8-வது இடத்தில் மிகவும் சிறப்பாக பேட்டிங் செய்வார்.
இவ்வாறு அவர் கூறினார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்