என் மலர்
கிரிக்கெட் (Cricket)

இன்ஸ்டாகிராமில் 5 மில்லியன் பாலோயர்கள் இருந்தும் ஜடேஜா பின்தொடரும் ஒரே ஒரு நபர்...யார் தெரியுமா?
- ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் 2 டெஸ்ட் போட்டியில் ஆட்டநாயகனாக ஜடேஜா தேர்வு செய்யப்பட்டார்.
- இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் என் நண்பரை 24 மணிநேரமும் பின்தொடர்கிறேன் என்று கூறினார்.
இந்திய ஆஸ்திரேலியா அணிகள் 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது. இந்த 2 டெஸ்ட் போட்டியில் ஆட்டநாயகனாக ஜடேஜா தேர்வு செய்யப்பட்டார்.
இந்நிலையில் இந்திய கிரிக்கெட் வீரர் ரவீந்திர ஜடேஜா, ஆஸ்திரேலியாவின் ஆஃப் ஸ்பின்னர் நாதன் லயனை இன்ஸ்டாகிராமில் பின்தொடர்கிறார்.
இன்ஸ்டாகிராமில் ஜடேஜாவால் பின்தொடரும் ஒரே ஒரு நபர் நாதன் லயன் மட்டுமே.
ஜடேஜா தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் ஒரு ஸ்கிரீன் ஷாட்டைப் பகிர்ந்துள்ளார். அதில் "என் நண்பர் நாதன் லயனை 24 மணிநேரம் பின்தொடர்கிறேன்" என்று கூறினார்.
Next Story