என் மலர்
கிரிக்கெட் (Cricket)

இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் இறுதிப் போட்டியில் மோதும்- ரிக்கி பாண்டிங் கணிப்பு
- தென் ஆப்பிரிக்க அணி ஆபத்தானவர்களாக இருக்கிறார்கள்.
- நான் விளையாடும் ஒவ்வொரு பெரிய ஆட்டத்திலும் குறிப்பாக ஆஸ்திரேலியாவின் கேப்டனாக இருந்தபோது வீரர்களிடம் அந்த தருணத்தை அனுபவிக்க சொல்வேன்.
20 ஓவர் உலக கோப்பை இறுதிப் போட்டியில் இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் மோதும் என்று ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் கணித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-
இறுதிப்போட்டி நடைபெறும் மெல்போர்னுக்கு யார் செல்வார்கள் என்று யாருக்கு தெரியும்? ஆனால் ஆஸ்திரேலியா தனது பிரிவில் இருந்து அரை இறுதிக்கு செல்லும். தென் ஆப்பிரிக்க அணி ஆபத்தானவர்களாக இருக்கிறார்கள். ஆனால் இறுதிப் போட்டியில் இந்தியா, ஆஸ்திரேலியா அணிகள் என்று நம்புகிறேன்.
நான் விளையாடும் ஒவ்வொரு பெரிய ஆட்டத்திலும் குறிப்பாக ஆஸ்திரேலியாவின் கேப்டனாக இருந்தபோது வீரர்களிடம் அந்த தருணத்தை அனுபவிக்க சொல்வேன். இது ஒரு பெரிய விளையாட்டு என்பதை உணர்ந்து உங்களுக்கும், மற்றவர்களுக்கும் எவ்வளவு அதிகமான திறமையை வெளிப்படுத்த முடியுமோ அவ்வளவு வெளிப்படுத்தினால் சிறப்பாக விளையாடுவீர்கள் என்றார்.