search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட்

    சிஎஸ்கே அணியில் சிக்சர் அடிப்பதை மிஸ் செய்கிறேன்- ஷிவம் துபே
    X

    சிஎஸ்கே அணியில் சிக்சர் அடிப்பதை மிஸ் செய்கிறேன்- ஷிவம் துபே

    • இங்கே விளையாடுவது ரஞ்சிக் கோப்பையில் விளையாடுவதைப் போன்ற உணர்வை எனக்கு கொடுக்கிறது.
    • சிஎஸ்கே மற்றும் இந்தியாவில் சிக்சர் அடிப்பதை நான் தற்போது மிஸ் செய்கிறேன்.

    டி20 உலகக் கோப்பை 2024 கிரிக்கெட் தொடரில் இந்தியா முதல் 3 லீக் போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளது. இதன் மூலம் சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது. இருந்தாலும் இந்திய அணியின் பேட்டிங் பெரிதாக சொல்லும் அளவில் இல்லை என்றே சொல்லலாம்.

    குறிப்பாக ஷிவம் துபே தடுமாறுவது ரசிகர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. ஏனெனில் ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணியில் அதிரடியாக விளையாடிய நிலையில் உலகக் கோப்பையில் சாதிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் சிக்சர் அடிக்க மிகவும் தடுமாறி வருகிறார்.

    இந்நிலையில் இங்குள்ள சூழ்நிலைகளுக்கு வித்தியாசமான அணுகுமுறை தேவைப்படுகிறது என தடுமாற்றம் குறித்து ஷிவம் துபே வெளிப்படையாக கூறியுள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    என்னுடைய ஃபார்மில் தடுமாறும் நான் செயல் முறையில் கவனம் செலுத்துகிறேன். ஆனால் இங்கே அழுத்தமில்லை. ஏனெனில் இங்கே அடிப்பது கடினம் என்றாலும் உன்னிடம் சிக்சர் அடிக்கும் திறமை இருப்பதால் அதை பயன்படுத்து என்று பயிற்சியாளர்கள் ஆதரவு தெரிவித்தனர். ஆனால் சிஎஸ்கே அணியில் நான் செய்ததை இந்த சூழ்நிலையில் செய்ய முடியாது என்று நினைக்கிறேன்.

    இங்குள்ள சூழ்நிலைகளுக்கு வித்தியாசமான அணுகுமுறை தேவைப்படுகிறது. இங்கே விளையாடுவது ரஞ்சிக் கோப்பையில் விளையாடுவதைப் போன்ற உணர்வை எனக்கு கொடுக்கிறது. இங்கே முதல் பந்திலிருந்தே உங்களால் அடிக்க முடியவில்லை. நீங்கள் இங்கே நேரமெடுத்து விளையாட வேண்டியுள்ளது. எனவே கண்டிப்பாக சிஎஸ்கே மற்றும் இந்தியாவில் சிக்சர் அடிப்பதை நான் தற்போது மிஸ் செய்கிறேன். ஏனெனில் இங்கே வலைப்பயிற்சியில் கூட அதிரடியாக விளையாட முடியவில்லை. பந்து வீசுவது நன்றாக இருந்தாலும் சிக்சர் அடிப்பதற்கு வாய்ப்பு கிடைக்கவில்லை.

    இவ்வாறு துபே கூறினார்.

    Next Story
    ×