என் மலர்
கிரிக்கெட் (Cricket)

இந்தியாவுக்கு எதிரான கடைசி டெஸ்ட்: கவாஜா- கேமரூன் கிரீன் நிதான ஆட்டம்
- கேப்டன் ஸ்டீபன் சுமித் 38 ரன்னும், டிராவிஸ் ஹெட் 32 ரன்னும் எடுத்தனர்.
- கேமரூன் கிரீன் தனது அரை சதத்தை பூர்த்தி செய்தார்.
இந்தியா- ஆஸ்திரேலியா அணிகள் மோதும் 4-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி நேற்று குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் தொடங்கியது.
முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி நேற்றைய முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 90 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 255 ரன்கள் எடுத்து இருந்தது. உஸ்மான் கவாஜா சதம் அடித்தார். அவர் 104 ரன்னுடனும், கேமரூன் கிரீன் 49 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.
கேப்டன் ஸ்டீபன் சுமித் 38 ரன்னும், டிராவிஸ் ஹெட் 32 ரன்னும் எடுத்தனர். இன்று 2வது நாள் ஆட்டம் நடைபெற்று வருகிறது. உஸ்மான் கவாஜா, கேமரூன் கிரீன் தொடர்ந்து விளையாடினர்.
இருவரும் நிதானமாக விளையாடினர். இன்றைய ஆட்டத்தின் முதல் ஓவரை ஜடேஜா வீசினார். கேமரூன் கிரீன் தனது அரை சதத்தை பூர்த்தி செய்தார்.
உஸ்மான் கவாஜா- கேமரூர் கிரீன் ஜோடியின் பொறுப்பான ஆட்டத்தால் ஆஸ்திரேலிய அணியின் ரன்கள் உயர்ந்தது. அந்த அணி 109.3 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 305 ரன்கள் எடுத்தது. அப்போது கவாஜா 128 ரன்னுடனும், கேமரூன் கிரீன் 65 ரன்னுடனும் களத்தில் உள்ளனர்.