என் மலர்
கிரிக்கெட் (Cricket)

இங்கிலாந்து டெஸ்ட் தொடர்: முதல் இரண்டு போட்டிக்கான இந்திய அணி அறிவிப்பு
- கே.எல். ராகுல் உடன் மூன்று விக்கெட் கீப்பர்.
- நான்கு சுழற்பந்து, நான்கு வேகப்பந்து வீச்சாளர்கள் இடம் பிடித்துள்ளனர்.
இங்கிலாந்து டெஸ்ட் கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப் பயணம் செய்து ஐந்து போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட இருக்கிறது. முதல் டெஸ்ட் வருகிற 25-ந்தேதி ஐதராபாத்தில் தொடங்குகிறது.
இந்த நிலையில் முதல் இரண்டு போட்டிகளுக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
ரோகித் சர்மா கேப்டனாகவும், பும்ரா துணைக் கேப்டனாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். கே.எல். ராகுல், கே.எஸ். பரத், த்ருவ் ஜுரேல் (அறிமுகம்) என மூன்று விக்கெட் கீப்பர்கள் அணியில் இடம பிடித்துள்ளனர்.
பும்ரா, முகமது சிராஜ், முகேஷ் குமார், ஆவேஷ் கான் என நான்கு வேகப்பந்து வீச்சாளர்கள் இடம் பிடித்துள்ளனர்.
அஸ்வின், ஜடேஜா, அக்சார் பட்டேல், குல்தீப் யாதவ் ஆகிய சுழற்பந்து வீச்சாளர்களும் இடம் பிடித்துள்ளனர்.
சுப்மன் கில், ஜெய்ஸ்வால், ரோகித் சர்மா, விராட் கோலி, ஷ்ரேயாஸ் அய்யர் ஆகியோர் பேட்ஸ்மேன்கள் ஆவார்கள்.
முதல் இரண்டு போட்டிக்கான இந்திய அணி:-
1. ரோகித் சர்மா, 2. ஜெய்ஸ்வால், 3. சுப்மன் கில், 4. விராட் கோலி, 5. ஷ்ரேயாஸ் அய்யர், 6. கே.எல். ராகுல், 7. கே.எஸ். பரத், 8. த்ருவ் ஜுரேல் (அறிமுகம்), 9. அஸ்வின், 10. ஜடேஜா, 11. அக்சார் பட்டேல், 12. குல்தீப் யாதவ், 13. முகமது சிராஜ், 14. முகேஷ் குமார், 15. பும்ரா, 16. ஆவேஷ் கான்.
2-வது போட்டி பிப்ரவரி 2 முதல் 6-ந்தேதி வரை விசாகப்பட்டினத்திலும், 3-வது போட்டி பிப்ரவரி 15-ந்தேதி முதல் 19-ந்தேதி வரை ராஜ்கோட்டிலும், 4-வது போட்டி பிப்ரவரி 23-ந்தேதி முதல் 27-ந்தேதி வரை ராஞ்சியிலும், 5-வது மற்றும் கடைசி போட்டி மார்ச் 7-ந்தேதி முதல் மார்ச் 11-ந்தேதி வரை தரம்சாலாவிலும் நடைபெறுகிறது.