என் மலர்
ஆன்மிக களஞ்சியம்
அக்னி நட்சத்திரத்தில் சிவனடியார்களுக்கு உதவுங்கள்!
- 1008 கலசங்களில் நிரப்பப்பட்ட நீரை அண்ணாமலையாருக்கு அபிஷேகம் செய்வதை நேரில் பார்ப்பது அளவு கடந்த புண்ணியத்தைத் தரும்.
- அக்கினி நட்சத்திர நாட்களில் அண்ணாமலையாருக்கு மட்டமின்றி அவரது அடியார்களுக்கும் உதவி, சேவை செய்தால் அபரிதமான பலன்களைப் பெற முடியும்.
அக்கினி நட்சத்திரம் நிறைவு பெறும் போது கடைசி 3 நாட்கள்களில் 1008 கலாசாபிஷேகம் செய்வார்கள்.
காலை 10 மணிக்கு உச்சிக்கால பூஜை தொடங்கும்போது 1008 கலசாபிஷேகத்தை நடத்துவார்கள்.
1008 கலசங்களில் நிரப்பப்பட்ட நீரை அண்ணாமலையாருக்கு அபிஷேகம் செய்வதை நேரில் பார்ப்பது அளவு கடந்த புண்ணியத்தைத் தரும்.
அக்கினி நட்சத்திர நாட்களில் அண்ணாமலையாரை குளிர்ச்சிப்படுத்த வேண்டும் என்பதற்காக மதியம் தயிர் சாதத்தை நைவேத்தியமாக படைப்பதும் வழக்கத்தில் உள்ளது.
அக்கினி நட்சத்திர நாட்களில் அண்ணாமலையாருக்கு மட்டமின்றி அவரது அடியார்களுக்கும் உதவி, சேவை செய்தால் அபரிதமான பலன்களைப் பெற முடியும்.
திருவண்ணாமலையில் நூற்றுக்கணக்கான சிவனடியார்கள் உள்ளனர்.
ஒரே ஒரு சிவனடியாருக்கு அக்கினி வெயிலை சமாளிக்க நீங்கள் குடை வாங்கி கொடுக்கலாம்.
கதராடை, செருப்பு, விசிறி போன்றவை வாங்கிக் கொடுக்கலாம்.
சிவனடியார்கள் மனம் குளிர்ச்சி அடைந்தால் அண்ணாமலையாரும் மனம் குளிர்ந்து உங்களை ஆசிர்வதிப்பார்.
ஏனெனில் அண்ணாமலையார் இன்றும் அங்கு மிகுந்த அருளாற்றலுடன் பக்தர்களுக்கு ஆசி வழங்கி முக்தி பாதைக்கு வழிகாட்டிக் கொண்டிருக்கிறார்.
அவர் மீது நம்பிக்கை வைத்து சென்றால் நிச்சயம் நல்லதே நடக்கும்.
நம்பிக்கை இல்லாமல் தவறாக நடந்து கொண்டால் தக்க தண்டனை கிடைக்கும்.