என் மலர்
ஆன்மிக களஞ்சியம்
அஸ்வமேத யாகம் செய்த பலன் பெற இவ்வாறு வணங்குங்கள்
- முதலில் ரிஷப தேவருக்கு நெய் தீபம் போட்டு அருகம்புல் கொடுத்து வாலைத்தொட்டு வணங்க வேண்டும். பிறகுதான் கணபதியை வணங்க வேண்டும்.
- நந்திதேவருக்கு பின்பு நின்று கொண்டு கொம்புகளுக்கிடையே லிங்கத்தை தரிசிப்பதே சிறந்த முறை.
பிரதோஷ நாளன்று உடல் சுத்தம் செய்து கொண்டு ஆலயத்தில் பிரவேசிக்க வேண்டும்.
முதலில் ரிஷப தேவருக்கு நெய் தீபம் போட்டு அருகம்புல் கொடுத்து வாலைத்தொட்டு வணங்க வேண்டும். பிறகுதான் கணபதியை வணங்க வேண்டும்.
நந்திதேவருக்கு பின்பு நின்று கொண்டு கொம்புகளுக்கிடையே லிங்கத்தை தரிசிப்பதே சிறந்த முறை.
ஆலயத்தில் கூட்டம் அதிகமாக இருந்தால் மனதால் லிங்கத்தை தியானிக்கலாம்.
தியானித்து விட்டு அப்பிரதட்சனமாக (வலம் கை ஓரமாக) சண்டிகேஸ்வரர் சந்நிதி வரை சென்று சண்டிகேஸ்வரரை வணங்கி விட்டு, அப்படியே திரும்பி வந்து முன்பு போல நந்தீஸ்வரர் பின்பு நின்று லிங்கத்தை தியானித்துக் கொண்டு, வழக்கம் போல இடமிருந்து வலமாக பிரதட்சனமாக வர வேண்டும்.
பிரகாரத்தில் சுவாமிக்கு அபிஷேகம் செய்யும் நீர் வருவதற்கு ஒரு தொட்டி அமைந்து இருக்கும். அதை கோமுகி நீர் தொட்டி என்பர். அந்த தொட்டி வரை வரவும்.
அந்த தொட்டியை கடக்க கூடாது.
அப்படியே வந்த வழியே செல்லவும். நந்தியையும், லிங்கத்தையும் தியானிக்கவும். மறுபடியும் அப்பிரதட்சணமாக சென்று சண்டகேஸ்வரரை வணங்கவும்.
வணங்கிவிட்டு வந்த வழியே வந்து கோமுகி நீர் தொட்டி வரை வரவும். அந்த வழியே திரும்பவும்.
இவ்வாறு மூன்று முறைகள் செய்து சிவனை வணங்க வேண்டும்.
இவ்வாறு பிரதோஷ நாளன்று சிவனை வணங்க பாபம் நீங்கி "அஸ்வமேதயாகம்" செய்த பலன் கிடைக்கும்.