search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிக களஞ்சியம்

    சக்கரத்தாழ்வார் பூஜையில் நவக்கிரகங்கள்
    X

    சக்கரத்தாழ்வார் பூஜையில் நவக்கிரகங்கள்

    • சுதர்சனம் என்னும் சக்கரத்தாழ்வார் பூஜையிலேயே நவக்கிரங்களும் இடம் பெற்று விடும்.
    • வைணவத்தில் தாயாருக்கும் பெருமாளுக்கும் மட்டுமே பெரும் இடம் தரப்பட்டிருக்கும்.

    சுதர்சனம் என்னும் சக்கரத்தாழ்வார் பூஜையிலேயே நவக்கிரங்களும் இடம் பெற்று விடும்.

    வைணவத்தில் தாயாருக்கும் பெருமாளுக்கும் மட்டுமே பெரும் இடம் தரப்பட்டிருக்கும்.

    நவக்கிரகங்கள் அவரவர் கர்ம பலனை வழங்கும் அதிகாரிகள் ஆவார்கள்.

    அவர்களுக்கு உண்டான மரியாதையும், மதிப்பும், பூஜையும் வைணவ தலங்களில் உண்டு.

    ஆனால் வெளிப்படையாக முன்நிறுத்தப்படுவதில்லை. அவர்களுக்கும் சேர்த்து அவர்களையும் ஆண்டளக்கும் பெருமாளே முன்னிறுத்தப்படுகிறார்.

    அவர் உருவத்திலேயே, இவர்களும் அடங்கி விடுகிறார்கள். அவதாரங்களில் கூட, நவகிரக அம்சங்கள் உண்டு.

    108 திவ்ய தேசங்களில் ஒன்பது திவ்யதேசங்கள், நவகிரகத் தலங்களாகச் சொல்லப்படுகின்றன. (திருநெல்வேலி&தூத்துக்குடியைச் சுற்றியுள்ள நவ திருப்பதிகள்)

    எனவே எந்த கிரக தோஷம் உள்ளதோ, அதற்கு ஏற்ப, உரிய தலத்துக்கு சென்று வழிபட்டு பலன் பெறலாம்.

    Next Story
    ×