search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிக களஞ்சியம்

    கருட வசனம்
    X

    கருட வசனம்

    • ‘கருடக் கிழக்கு’ என்ற ஒரு கிழங்கை வீட்டு வாசலுக்கு முன் கட்டுவதுண்டு.
    • இப்படி செய்தால் விஷ ஜந்துக்கள் வீட்டிற்குள் வராது. இந்தக் கிழங்கு நீண்ட வேர் உள்ள பீட்ரூட் கிழங்கு போன்றிருக்கும்.

    "என்னை வழிபடுதல், ஆடம்பரம் இல்லாமல் இருத்தல், என் கதைகளைக் கேட்டல், என்னை நினைத்து உருகுதல், எந்தப் பயனையும் எதிர்பாராதிருத்தல் இத்தகைய உயரிய பண்புகள் எவரிடம் உள்ளதோ, அவர்களே உண்மையான பக்தர்கள்.

    அவர்களே சிரேஷ்டர்கள், தவசிகள், வித்வான்கள், அப்படிப்பட்டவர்களுக்கு ஞானத்தை உபதேசிக்கலாம். அவர்களிடமிருந்து ஞானத்தையும் பெறலாம்.

    அவர்கள் என்னைப் போல ஆராதனைக்கு உரியவர்கள்" என்று ஸ்ரீ கருடன் கூறியதாக 'காருடம்' என்னும் நூல் தெரிவிக்கிறது.

    ஹர்ஷனால் எழுதப்பட்ட 'நாகா நந்தம்' என்ற நாடக நூலின் 4, 5 அத்தியாயங்களில் இரண்டு செய்யுள்களில் கருடனின் சக்தி, கருடனின் கருணை பற்றிய செய்திகள் கூறப்படுகின்றன.

    கருட புராணம் "சகல விதமான தர்ம சாஸ்திரங்கள், நீதிகள், பிரேத கல்பம், வியாகரணம், சந்தஸ், ஜோதிஷம், சாமுத்ரிகா லட்சணம், ரன பரீட்சை முதலியவற்றைப் பற்றி கருடன் உபதேசிக்கிறார்" என்று குறிப்பிடுகிறது.

    "மகா விஷ சர்ப்பங்களை அடக்கி வைப்பவர் கருடன்" என்று காளிதாசன் ரகு வம்சத்தில் கூறியுள்ளார்.

    கழுகரசன் வானத்தில் ஒரு யானையையும், ஓர் ஆமையையும் தன் இரண்டு கரங்களால் பிடித்துக் கொண்டும், மூக்கினால் ஒரு கரத்தை எடுத்துக் கொண்டும் ஆவேசமாகப் பறக்கிறார்.

    மரத்தில் ரிஷிகள் தொங்குகிறார்கள்.

    கருட பகவானின் வீரத்தை நன்கு காட்டும் இந்த ஒரு செயலுக்காகவே 'கருடன்' என்று இந்திரன் பெயரிட்டதாகப் புராண வாயிலாக அறிகிறோம்.

    'கருடக் கிழக்கு' என்ற ஒரு கிழங்கை வீட்டு வாசலுக்கு முன் கட்டுவதுண்டு.

    இப்படி செய்தால் விஷ ஜந்துக்கள் வீட்டிற்குள் வராது. இந்தக் கிழங்கு நீண்ட வேர் உள்ள பீட்ரூட் கிழங்கு போன்றிருக்கும்.

    சிசுபாலனின் சண்டையில் கிருஷ்ணனின் போர்ப் பாசறையின் மீது வெற்றி தரும் கருடத்வஜம் (கருடக் கொடி) பறந்தது.

    கிருஷ்ண பகவானுக்கும் கருடத்வஜம் உண்டு என்று புராணங்கள் மூலம் அறிகிறோம்.

    பெண்கள் ஆவணி மாதம் வரும் பஞ்சமியில் கருடனுக்கு நோன்பு செய்வார்கள்.

    அன்று கருடனின் அவதார நாள். இந்த நோன்பை 'கருட பஞ்சமி' என்று அழைப்பார்கள்.

    ஸ்ரீரங்கம், திருநறையூர், நாச்சியார் கோவில் ஆகிய தலங்களிலுள்ள கருட பகவானை வணங்குவதை வைணவர்கள் புனிதமாகக் கருதுகிறார்கள்.

    Next Story
    ×