என் மலர்
ஆன்மிக களஞ்சியம்
லலிதா சகஸ்ரநாமம் படிக்கும் முறை மற்றும் பலன்கள்
- லலிதாம்பிகையே ஸ்ரீகாளிமாதா, துர்காதேவி, பராசக்தி, பகவதி, பிரபஞ்சத்தின் தாய்.
- ஒவ்வொரு நாமமும் மிகவும் சக்தி வாய்ந்தது.
மனித உடலில் குண்டலினி சக்திதான் மிகவும் உயர்ந்தது.
லலிதா சகஸ்ரநாமம் உடலில் உள்ள ஆறு சக்கரங்களையும் குண்டலினி சக்தியினையும் கூறுகின்றது.
'லலிதாம்பிகை சிவ சக்தி ஒன்றாய் இணைந்தவள்'லலிதா சகஸ்ர நாமத்தினையும், ஸ்ரீவித்யாவினையும் படிக்க அரிய ஜாதி, மத, இன வேறுபாடு கிடையாது.
உயர் பண்புகளை தன்னுள் வளர்த்துக் கொள்வோர் அனைவரும் படிக்கலாம்.
லலிதா சகஸ்ரநாமத்தின் முக்கியத்துவத்தினை மேலும் கூறும் பொழுது
* லலிதாசகஸ்ரநாமம் சொல்வது லலிதாம்பிகைக்கு மிகவும் பிடித்தமானது. வேதத்திலும், தந்திரத்திலும் இதற்கு நிகரானது இல்லை.
* இதனை தினமும் சொல்வது புனித நீரில் நீராடிய புண்ணியத்தினை தரும்.
* உணவுப்பொருள், நிலம், பசு தானம் செய்த புண்ணியம் கிடைக்கும்
* குழந்தைவரம் வேண்டுவோர் குழந்தை பாக்கியம் பெறுவர்.
* அன்றாடம் சொல்வதால் தீமைகள் விலகும்.
* பூஜை செய்யும் முறைகளில் செய்யும் தவறுகளால் ஏற்படும் பாவம் நீங்கும்.
* அன்றாட நித்திய பூஜை முறைகளையும், அவரவர் குடும்ப வழி பூஜைகளையும் செய்யாது இருப்போருக்கு ஏற்படும் பாவம் நீங்கும்.
* கிரக தோஷங்களால் ஏற்படும் தீமைகள் நீங்கும்.
* எதிரிகள் நீங்குவர்.
* வெற்றி கிட்டும்.
* பொன், பொருள், புகழ் சேரும்.
* லலிதா சகஸ்ரநாமம் அன்றாடம் சொல்வது ஒரு தவம்.
* இறைவனுக்கு வேறு எதனையும் அளிக்க வழி இல்லை. எனினும் இந்த நாமத்தினைச் சொல்வதே போதும்.
* தன்னம்பிக்கை கூடும்.
* லலிதாம்பிகையே ஸ்ரீகாளிமாதா, துர்காதேவி, பராசக்தி, பகவதி, பிரபஞ்சத்தின் தாய்.
* ஒவ்வொரு நாமமும் மிகவும் சக்தி வாய்ந்தது.
படிக்க ஆரம்பித்தால் 1000 நாமத்தினையும் முழுமையாக சொல்லி முடிக்க வேண்டும்.
பகுதி பகுதியாக இடைவெளி விட்டு சொல்ல வேண்டாம். காலை மாலை இருவேளையும் உகந்த நேரம். ஒருகுரு மூலம் ஆரம்பித்துக்கொள்வது மிகவும் நல்லது.