என் மலர்
ஆன்மிக களஞ்சியம்
பம்பையில் நீராடினால் 7 தலைமுறை வளம்பெறும்
- பம்பை நதியில் பித்ரு தர்ப்பணம் செய்தால் அவர்களின் 7 தலை முறையினர் வாழ்க்கையில் வளம் பெற்று வாழ்வார்கள் என்பது ஐதீகம்.
- தமிழ்நாட்டில் முதன் முதலாக அய்யப்பனுக்கு குளித்தலையில் தான் கோவில் கட்டப்பட்டது.
• தமிழ்நாட்டில் முதன் முதலாக அய்யப்பனுக்கு குளித்தலையில் தான் கோவில் கட்டப்பட்டது.
• சபரிமலை செல்லும் அய்யப்ப பக்தர்கள் பம்பை நதியில் நீராடி முடித்ததும் கன்னி அய்யப்பமார்களுக்கு விருந்து கொடுத்து உபசரிப்பார்கள். இந்த விருந்தில் அய்யப்பனே நேரில் வந்து உணவு உட்கொள்வதாக நம்பப்படுகிறது.
• பம்பை நதியில் பித்ரு தர்ப்பணம் செய்தால் அவர்களின் 7 தலை முறையினர் வாழ்க்கையில் வளம் பெற்று வாழ்வார்கள் என்பது ஐதீகம்.
• 60 ஆண்டுகளுக்கு முன்பு வரை சபரிமலைக்கு இருமுடி கட்டி சென்றவர் சில நூறு பேர் மட்டுமே. வாகன வசதி வந்த பிறகு தான் சபரிமலைக்கு செல்பவர்கள் எண்ணிக்கை லட்சக்கணக்கில் உயர்ந்து இன்று பல கோடி ஆகிவிட்டது.
• நடிகர் நம்பியார் 1943&ம் ஆண்டு தொடங்கி 50 ஆண்டுக்கும் மேலாக இருமுடி கட்டி விரதம் இருந்து மலைக்கு சென்று வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
• பந்தளம் அரச குடும்பத்தினரின் வாரிசுகள் மட்டும் சபரிமலையில் 18 படிகளிலும் இரு முடி கட்டாமல் ஏறிச்செல்ல அனுமதிக்கப்படுகிறார்கள்.
• ஒரு அய்யப்ப பக்தர் மாலை அணிந்ததில் இருந்து அவர் சபரிமலை சென்று திரும்பும்வரை தினமும் வீட்டு வாசலில் விளக்கு ஏற்ற வேண்டும். அந்த விளக்கு குறைந்தபட்சம் 2 மணி நேரமாவது எரிய வேண்டும். சபரிமலை செல்லும் பக்தருக்கு இந்த விளக்கு வழி காட்டுவதாக ஐதீகம் உள்ளது. சபரிமலை சென்று திரும்பி வந்ததும் தினமும் விளக்கு ஏற்றிய இடத்தின் அருகில் தேங்காய் உடைத்து "சுவாமியே சரணம் அய்யப்பா" என்று சரண கோஷத்தை சொல்ல வேண்டும். அதன் பிறகே வீட்டுக்குள் செல்ல வேண்டும்.