என் மலர்
ஆன்மிக களஞ்சியம்
பசுஞ்சாணம் தெளித்தால் உண்டாகும் நலன்கள்
- பசுஞ்சாணி, கிருமிநாசினியாக மட்டுமின்றி, பில்லி சூனியம், திருஷ்டி கெட்ட எண்ணம் ஆகியவற்றிலிருந்தும் நம்மை காக்கும் சக்தி உடையது.
- இதனால்தான் வீட்டின் முன் வாசலிலும் பின் வாசலிலும் அன்றாடம் பசுஞ்சாணி கரைத்துத் தெளிக்க வேண்டும் என்பார்கள்.
பசுஞ் சாணிக்கும் பசு நீருக்கும் ஈடு வேறில்லை.
பசுஞ்சாணி, கிருமிநாசினியாக மட்டுமின்றி, பில்லி சூனியம், திருஷ்டி கெட்ட எண்ணம் ஆகியவற்றிலிருந்தும் நம்மை காக்கும் சக்தி உடையது.
இதனால்தான் வீட்டின் முன் வாசலிலும் பின் வாசலிலும் அன்றாடம் பசுஞ்சாணி கரைத்துத் தெளிக்க வேண்டும் என்பார்கள்.
புதிதாக வாங்கும் மனையில் ஆயிரக்கணக்கான வருடங்களாக நமக்குத் தெரிய வாய்ப்பின்றி ஏற்பட்டிருக்கக் கூடிய தீவினைகள் மற்றும் மனைக்கடியில் இருக்கக் கூடிய தீயவற்றால் நாம் பாதிக்கப்படாமல் இருப்பதற்காக தொடர்ந்து பல நாட்கள் பசுஞ்சாணி நீர் தெளிப்பது வழக்கமாக உள்ளது.
வீடுகளில் மட்டுமின்றி ஆலயத் திருக் குடமுழுக்கின் போதும் ஆலய வளாகத்தை நுண்ணிய சக்தி வாய்ந்த மந்திர ஒலியால் உருவாக்குவதற்கு ஈடாக பசுஞ்சாணியையும் பயன்படுத்துவது இன்றும் வழக்கமாக உள்ளது.
பசு நீர் புற்று நோயைத் தீர்ப்பதில் ஒரு அருமருந்தாகும். அதோடு, பிறரின் தீய பார்வையால் பாதிக்கப்பட்டவர்கள், பசு நீரை எண்ணெய் போல தேய்த்துக் கொள்வதும், அதிகம் கிடைப்பின் பசு நீரிலேயே, அவ்வப்போது குளிப்பதும் மிகச் சிறந்த பாதுகாப்பாகும்.